தன்னைநொந்தழுவனோ
உன்னைநொந்தழுவனோ
தவமென்ன வென்றழுவனோ
தையலர்க் கழுவனோ மெய்வளர்க்க அழுவனோ
தரித்திர திசைக்கழுவனோ
இன்னமென் னப்பிறவி வருமோவென் றழுவனோ
வெல்லா முரைக்கவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே. (7)
காயாமுன் மரமீது பூபிஞ்
சறுத்தனோ
கன்னியர்கள் பழிகொண்டனோ
கடனென்றுபொருள்பறித் தேவயிறெரிந்தனோ
கிளைவழியில்முள்ளிட்டனோ
தாயாரு டன்பிறவிக்
கென்னவினை செய்தனோ
தந்தபொரு ளில்லையென்றனோ
தானென்று கெர்வித்து
கொலைகளவு செய்தனோ
தவசிகளை யேசினேனோ
வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ
வாணரைப் பழித்திட்டனோ
வடவுபோ லேபிறரை சேர்க்கா தடித்தனோ
வந்தபின் என்செய்தனோ
ஈயாத லோபியென் றேபெய ரெடுத்தனோ
எல்லாம் பொறுத்தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே. (8)
தாயாரிருந்தென்ன
தந்தையு மிருந்தென்ன
தம்பிறவி யுறவுகோடி
தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன
தாரணியை யாண்டுமென்ன
|