பக்கம் எண் :

திருநாளைப்போவார்224நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

விந்தையும் ஜாலமும் உன்னிட மிருக்குதே
    வினையொன்று மறிகிலேனே
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே
    வேடிக்கை யிதுவல்லவோ
யிந்தவுல கீரேழு மேனளித்தாய் சொல்லு
    இனியுன்னை விடுவதில்லை
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
    தில்லைவாழ் நடராஜனே. (5)

வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
    வாஞ்சையில் லாதபோதிலும்
வாலாய மாய்க்கோயில் சுற்றாத போதிலும்
    வஞ்சமே செய்தபோதிலும்
மொழியெகனை மொகனையில் லாமலே பாடினும்
    மூர்க்கனே முரடாகிலும்
மோசமே செய்யினும் தேசமே கவரினும்
    முழுகாமி யேயாகினும்
பழியெனக் கல்லவே தாய்தந்தைக் கல்லவோ
    பார்த்தவர்கள் சொல்லார்களோ
பாரறிய மனைவிக்கி பாதியுட லீந்தநீ
    பாலனைக் காக்கொணாதோ
யெழில் பெரிய அண்டங்க ளடுக்கா யமைத்தநீ
    என்குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
    தில்லைவாழ் நடராஜனே. (6)

அன்னைதந் தைகளென்னை யீன்றதற் கழுவனோ
    அறிவிலாததற் கழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையேநோவனோ
    ஆசைமூன்றுக் கழுவனோ
முன்பிறப் பென்ன வினைவந்து மூளுமென்
    றழுவனோ முத்திவருமென்றுணர்வ