பக்கம் எண் :

திருநாளைப்போவார்223நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

உடலென்ற கும்பிக்கே உணவென்ற யிரைதேடி ஓயாம லிரவுபகலும்
      உண்டுண்டுறங்குவதைக்கண்டதே யல்லாது ஒருபயனடைந்திலேனை
தடமென்ற மிடிகரையில் பந்துபா சங்களெனும் தாபரம் பின்னலிட்டு
      தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை யிவ்வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்றுகேளாதிருப்பதுன்னழகாகுமோ
      ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே. (3)

பம்புசூ னியமல்ல வைப்பல்ல மாரணந் தம்பனம் வசியமல்ல
பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச மதுவல்ல சாலமல்ல

அம்புக் குண்டுகள்விலகப் பொழியுமந் திரமல்ல
     ஆகாய குளிகையல்ல
அன்போடு செய்கின்ற வாதமோ டிகளல்ல
    அரியமோ கனமுமல்ல
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிர்ம்மரிஷி
    கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போகமுனி யிவரெலாங்
    கூறிடும் வயித்தியமல்ல
எம்மனதுன் னடிவிட்டு நீங்காது நிலைநிற்க
    ஏதுளவு புகலவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
    தில்லைவாழ் நடராஜனே. (4)

நொந்துவந் தேனென்று ஆயிரஞ் சொல்லியும்
    செவியென்ன மந்தமுண்டோ
நுட்பநெறி யறியாத பிள்ளையைப் பெற்றபின்
    நோக்காத தந்தையுண்டோ
சந்ததமுந் தஞ்சமென் றடியைப் பிடித்தபின்
    தளராத நெஞ்சமுண்டோ
தந்திமுக னறுமுகன் இருபிள்ளை யில்லையோ
    தந்தைநீ மலடுதானோ