பக்கம் எண் :

திருநாளைப்போவார்3நந்தனார் சரித்திரக் கீர்த்தனை


போதமூ வாயி ரத்தோர் பொன்னடிக் கமல முன்னி
ஓது நந்தனார் சரிதை யுரைத்திடத் துணிந்தே னானே.

_____________

அவையடக்கம்.

எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.

சிற்பிகள் காண்போர் சிந்தையு முவக்கச் செப்புநல் லின்புறத் தீட்டும்
பாற்பனங் கண்டவறிவிலா னெழுதும் விதமென முத்தமி ழென்னுஞ்
காற்புகழ் கல்வித் துறையெலாந் தெரிந்ததூயநற் புலவர்முன் கருதிப்
பாற்புற விசைக்குங் கீர்த்தன மிதனைப் புவிமிசை மதிப்பர்க ளம்மா.

விநாயகர் வணக்கம்.

ராகம் - மோஹனம்; தாளம் - ஆதி.

பல்லவி.

கணநாதாசரணம் காத்தருள்
கணநாதாசரணம்.

அனுபல்லவி.

பணமார்சேஷன்றாங்கிய பார்மீதினிலே நேருங்
குணமார்நந்தன்சரித்திரங் கூறக்கிருபைக்கண் பாருங் (கண)

சரணங்கள்.

கால்லும்ப்ரணவமூலா தூயவேதாந்த நாதா
துலங்குமுனிவர்மனத் துகளறுத்தருள் போதா
நலமோதகமுதல் நாடிநுகர்வி னோதா
நாயேன்சொலுந்தமிழை நாடிரக்ஷிக்குந் தாதா (கண)

அம்பரமானமன்று ளாடும்பர னளிக்க
அரைநொடியினில்வல மாகிமனங் களிக்க