சபாபதி வணக்கம்.
கலி விருத்தம்.
தக்க சீர்த்தி நந்தன்
சரிதமாம்
இக்க தையை யெடுத்தே யியம்பிட
செக்கர் மேனியன் தில்லைச் சபைதனிற்
றக்கத் தோமெனுந் தாள்கள் சிரங்கொள்வாம்.
சிவகாமிவல்லி வணக்கம்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம்.
பாம்பினைத் தந்தையாகப் படைத்துப்பின்
பெவருங் காணப்
பாம்பினைப் பணியாக் கொண்ட
பரையருட் பாத மேத்திப்
பாம்பினிற் புலியும் பாம்பும் பார்த்திட நந்த
னார்க்கன்
பாம்படி முத்தி தந்த பழங்கதை
பகரு வேனே.
------------
சுப்பிரமணியர் - தெய்வானை- சரஸ்வதி.
லக்ஷ்மி - விஷ்ணு - இவர்கள் வணக்கம்.
எழுசீர்க் கழிநெலடி ஆசிரிய
விருத்தம்.
சச்சிதா னந்த சதாசிவ னருளைச்
சார்ந்தநித் யானந்த நந்தன்
உச்சிதக் கதையைக் கீர்த்தனை
யாக வுலகெலாந் துதித்திடச் சொல்ல
அச்சிலை வேற்கை யறுமுகன் தெய்வ யானைசெங்
கலைமகள் மாலை
பச்சைமான் மற்றும் பரவிய தேவர் பாதபங்
கயம்பணி குவனே.
_____________
திருத்தொண்டர் முதலிய தில்லை
மூவாயிரவர்
வணக்கம்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம்.
வாதவூ ரடியா ரோடு மற்றறு
பத்து மூவர்
பாதமே வணங்கித் தில்லைப் பதிதனி னாளு மேவும்
|