உ
திருநாளைப்போவார்
என்னும்
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை.
கற்பக விநாயகர் வணக்கம்.
காப்பு - வெண்பா.
கந்தன்தன் தந்தை கழல்வணங்கிப்
பேறுபெற்ற
நந்தன் சரித்திரத்தை நானியம்பச்- சுந்தரஞ்சேர்
தில்லைமணிக் கோபுரம்வாழ் கற்பகத்தின்
பொற்பதங்கள்
அல்லும் பகலுந் துணை.
முக்குறுணி விநாயகர் வணக்கம்.
விருத்தம்.
நந்தணி கரத்தான் றில்லை நாயக
னருளால் வந்த
நந்தன்முக் குறுணி பேர்வி நாயகன்
றாள்வ ணங்கி
நந்தன்தன் சரிதமென்னும் நற்புகழ்ச்
சொலிப்பின்போர்
நந்தமுற் றுலகி னாளும் நலமுடன் வாழ்வேன் நானே.
|