Primary tabs
மகாராஷ்டரம், தெலுங்கு, இந்துஸ்தானி என்னும் இவ்வைந்து
அன்னியபாஷைகளினும் வல்லவராயிருந்தார்.
இங்ஙனம், பலபாஷாவிற்பன்னராயும், சங்கீதஞானம் மிக்குடையவராயும்,
பிரசங்க வன்மையிற் சிறந்தவராயும் பரோபகார சிந்தையராயும் குடும்பவலையிற் சிக்காத திடச் சித்தராயும் விளங்கிய
கோபாலகிருஷ்ணபாரதியார், தமது
தொண்ணூறாவது வயதில், பஞ்சபூத சேர்க்கையாலாகியதும்,நீர்மேற்குமிழிபோல் நிலையற்றதுமான தமது தூலச் சரீரத்தை ஒழித்து, நிலையான பேரின்ப வாழ்வெய்தினர்.