தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நந்தனார் சரித்திரம்


இதற்கு ஆயிரரூபா மூலதனமாக வைத்தார். இக்கட்டளைகள் இன்றும் நடந்து 
வருகின்றன.  

பாரதியார் செய்து வந்த தர்ம கைங்கர்யங்கள் இன்னும் பல. கலியாணம்
முதலிய சடங்குகளுக்குப் பொருளுதவி செய்வார்; உடையில்லாதவர்களுக்கு
உடைகொடுப்பார்; ஊண் இல்லாதவர்களுக்கு ஊண் அளிப்பார். சங்கீதவித்வான்கள் தம்மை ஆதரிப்பாரின்றி மனம் வருந்திய காலத்து, அவர்களுக்குத் தாம் பொருள் கொடுத்துக் காலட்சேபம் செய்யச் சொல்லிப் பல கனவான்களை வரவழைத்து சபை கூட்டி அவ்வித்துவான்களைப் பிரபலப்படுத்துவார்.

இவர் நந்தனார் சரித்திரத்தைக் கீர்த்தனையாகப் பாடிய பிறகு வேறு சில
அடியார் சரித்திரங்களையும் கீர்த்தனையாக இயற்றிப் பிரசங்கித்து வந்தார்.
அச்சரிதங்களாவன, திருநீலகண்ட நாயனார் சரிதம், இயற்பகைநாயனார் சரிதம்,
காரைக்காலம்மையார் சரிதம் என்பனவாம். இம்மூன்றனுள் கடையிற் கூறப் பெற்ற
காரைக்காலம்மையார் சரிதம் பாரதியார் காலத்திற்குப்பின் எவ்வாறாகவோ மறைந்து விட்டது. முன்னைய இரண்டும் இன்னும் அச்சு வாகனமேறி வெளிவரவில்லை. பாரதியார் கற்கண்டும் கனிரசமும்போல் இனிக்கப்பாடிய தனிக்கீர்த்தனைகளும் இன்னும் வெளிவந்தில.

பாரதியார் நூல்கள் இயற்றியது தமது தாய்மொழி ஒன்றிலேயே யாயினும்,
சமஸ்கிருதம், கன்னடம்,


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-02-2019 14:59:18(இந்திய நேரம்)