தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நந்தனார் சரித்திரம்


பின்னர் சீசய்யாதுரை தாம் கூறியவாறே நந்தனார் சரித்திரக் கீர்த்தனையை அச்சிட்டுப்
புத்தக உருவாய் வெளிப்படுத்தினார். அதுவே முதன்முதல் வெளிவந்த அச்சுப்பிரதி.
அப்பிரதி இப்பொழுது காண்பதரிதாயுள்ளது. இது நிற்க.

நந்தனார் சரித்திரத்தைக் கீர்த்தனையாகச் செய்து பிரசங்கித்தபிறகு, பாரதியார்
புகழ் எங்கும் பரவுவதாயிற்று. பலர் அவரைத் தமது இல்லங்களுக்கு அழைப்பித்துக்
கதாட்பிரசங்கம் செய்யும்படி வேண்டினர். பாரதியார் அவர்கள் விருப்பத்தைத் தம்மால்
கூடியவரையில் நிறைவேற்றி வந்தார். இப்பிரசங்கங்களால் பாரதியார் யாதொரு பிரதிப்
பிரயோஜனத்தையும் எதிர்பார்த்திலர். ஆயினும் பலர் தாமே வலிய அவர்க்குப் பொருள்
கொடுத்து அதை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினர். பாரதியார், பொருளாற் செய்யத்தக்க
பல நற்காரியங்கள் உளவென்னும் உண்மையை உணர்ந்து, தமதன்பர்கள் அளிக்கும்
பொருளைப் பெற்றுவந்தார். இங்ஙனம் இவர் பெற்றுவந்த பொருள் சில காலத்தில் மிகவும் அதிகமாய்விட்டது. உடனே அப்பொருளை அறவழியிற் பயன்படுத்தும்
நோக்கமுடையவராய், மாயவரத்தில் தேசாந்தரிகள் பதின்மருக்கு ஒவ்வொருநாளும்
அன்னமளிக்கும்படி ஒருகட்டளை ஏற்படுத்தி அதற்கு ஐயாயிரம் ரூபா
மூலதனமாகவைத்தார். இஃதன்றியும், சிதம்பரத்தில் அர்த்தசாம பூசையானபிறகு, கோயிற்
பூசைக்காரர் ஒருவர்க்கு அன்னமளிக்கும்படி ஒரு கட்டளை ஏற்படுத்தி


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-02-2019 14:58:41(இந்திய நேரம்)