பக்கம் எண் :

திருநாளைப்போவார்8நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

நண்டோகுடியிருக்கும்-சிறு-நத்தைகமடம் வலுத்திருக்கும்
தோலூறுங்கேணிகளில்-வெகு-தொல்லைப்படும்வாடை சொல்லறியாப்
பரம்போஅடித்திருக்கும்-வயற்-பக்கங்களில் மெத்த நொக்கெலும்பும்
கிழித்தோல்நரம்புகளும்-அவர்க்-கீனமில்லைசிறு மீனுலரும்
தெருவில்விளையாடிக்கொண்டு-அவர்-தெந்தினம்பாடுவர் சுந்தரமாய்
இலுப்பைமணியரையில்-கட்டி-இண்டந்தலைகளில் பூண்டிருக்கும்
சங்குதோடுகாதணியும்-அருந்-தாவடமேயவர் தூவிடமாம்
மணியோதரித்திருப்பார்-தெரு-வாசற்புறத்தினி லேசிக்கொண்டு
கொண்டாட்டமாயிருப்பார்-கையைக்-கொட்டிக்கொண்டு தமக்கிஷ்டமுடன்
மதுவுண்டுகெக்கலிப்பார்-பறை-வாத்தியமும்வெகுநேர்த்தியுடன்
இருக்கும்புலைப்பாடி-அதில்-ஈசன்திருவடிநேசமுடன்
சாரும்ஒருபுலையர்-அவர்-ஜாதிமுறை தவறாதவராம்
நந்தனாரவர்பெயராம்-வெகு-நல்லவராமிந்தத் தொல்லுலகில்
அவரேசிவனடியார்-அவர்க்-காருமெதிரில்லைத் தாரணியில்
கோடிகோடிஜன்மங்களோ-முன்னங்-குற்றமறச்செய்த நற்றவமே
அவதாரமானதுவோ-ஈசன்-அன்புபுரியும்பே ரின்பசுகம்
கொள்ளைகொள்ளவோபிறந்தார்-திருக்-கோவில்வலம்வந்தா ராவலுடன்
செய்யும்பணிவிடைகள்-ஈசன்-சிந்தைமகிழ்ந்து குளிர்ந்திடவே
மத்தளம்பேரிகைக்கும்-இசை-வார்கொடுத்தப்புறந் தோல்கொடுத்து
மறவாமலே தினமும்-நல்ல-வாசம்பெருகுங்கோ ரோசனையும்
தேவாலயங்கள்தோறும்-தந்து-சித்தமுருகிய பக்திவெள்ளம்
புரண்டோடிக்கங்குகரை-என்று-பேதமறியவொண் ணாதுகண்டீர்
ஜாதியில்நீசரவர்-பேணிச் சாருமுறமுறை யாருடனே
திருப்புன்கூர்ச்சென்றரனைக்-கண்டு-சேவித்திசைபாடி பாவித்தபின்
தில்லைச்சிதம்பரத்தைக்-கண்டு-சேவிக்கவேண்டுமென் றாவலுடன்
நாளைப்போவேனென்றாராம்-தன்னை-நாடும்பறையர்க ளோடிவந்து
அண்ணே நீ போகாதே-நமக்-காண்டைபொல்லாதவன் வேண்டிக்கொள்ளான்
பார்ப்பாரசாதியுண்டே-என்ன-பாடுபடுமுழுக் காடுமங்கே
நமக்குந்திருநாளோ-அந்த-ஞாயமுண்டோ யென்னமாயமிது
வென்றேதடைசெய்தார்-சிவன்-வேடிக்கைதானென்றுநாடிக்கொண்டே
அறியாதுபோலிருந்த-செம்பொன்-னம்பலத்தாடியைக் கும்பிடவே