பக்கம் எண் :

திருநாளைப்போவார்9நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ஆதனூர்தனிலிருந்து-விடும்-அம்புபோலப்பறந் தையமின்றித்
தில்லையருகில்வந்தார்-மனந்-தேறிக்கொண்டார்குறையாறிக்கொண்டார்
வண்டாமணியோசை-காதில்-கேட்குதென்றாரதைப் பார்க்கவென்றே
கொண்டாட்டமாய்வந்தார்-கையைக்-குவித்துக்கொண்டேதனக்கம்பிட்டதோ
வென்றேமனமகிழ்ந்தார்-தெரு-வீதியிலேவந்து காதலுடன்
கண்டார்களையாறி-இரு-கண்களிலானந்தம் பொங்கிடவே
நின்றார்மதிற்புறத்தே-வெகு-நேர்த்தியென்றாரிதைப் பார்த்ததில்லை
பணிந்தார்பரவசமாய்-நல்ல-பாக்யசாலிக ளாகுமென்றார்
இதுதானோதில்லைப்பதி-என்று-எக்கலித்தாராடிக் கெக்கலித்தார்
ஓயாவுன்சந்நிதியே-நான்-ஆசைகொண்டுவந்தே னேசமுடன்
தெருவின்பொடித்தூளை-அள்ளித் தேகமுழுதிலுந் தாகமுடன்
தரித்தார்திருநீறாய்-நாலு-சாஸ்த்ரவேதங்கள் பார்த்துணரும்
பெரியோரிருக்குமிடம்-இந்தப்-பேயனிருப்பது ஞாயமல்ல
நானோபறைச்சாதி-தில்லை-நாதன்தரிசன மாதரவாய்ப்
பண்ணாப்படுபாவி-இந்தப்-பாரிலிருப்பது சீரலவே
என்றேகுளத்தோரம்-புக்கு-ஏங்கிநின்றார் துயர் நீங்கிநின்றார்
ஓயாப்பெருங்கவலை-கொண்டு-உள்ளங்குழைந்திட வெள்ளமெனக்
கண்ணீர்கரைபுரள-இரு-கைதொழுதாரவர் மெய்தொழுதார்
கீழேபுரண்டழுதார்-ஒன்றுங்-கேள்விமுறையில்லை யோநாதா
வென்றேதலைகுனிந்தார்-என் தன்-வேதனையைக்கண்டு ஆதரிக்கும்
தெய்வங்கிடையாதோ-பாவி-சித்தந்தெளியவி ரக்திதந்து
வாவென்றழைப்பாரோ-விண்ணில்-வானவர்கள் போற்றுமூனமிலா
கனகசபைநடனம்-கண்ணிற்-காட்டக்களித்திட நாயடியேன்
வருந்தித்துதியேனோ-என்தன்-வாணாளொழிவது வீணலவே
அடடாயிதென்னவென்று-சொல்லி-அந்நகர்வீதியைச் சுற்றிவந்தார்
இரவும்பகலோயா-ரதை-ஈசன் கண்டு விசுவாசமுடன்
பாலகிருஷ்ணன்
பணியும்-திருப்-பாதமுள்ள தில்லைநாயகனே
கனவினிலுருவாகி-வந்து-காட்சிகொடுத்துக் கடாக்ஷித்தபின்
எரியினிடைமூழ்கி-வெகு-இன்பம்பெருகிய அன்பர்துதி
வேதமுனிவடிவாய்த்-தில்லை-வேதியர்கண்டிரு கைதொழுதார்
அங்கம்புளகிதமாய்ச்-செம்பொன்-னம்பலத்தாடிய சம்பிரமத்தைக்
கண்டா ரறிந்தில ரால்.