பக்கம் எண் :

100

முடியும் முரசும் தப்பட்டையும் ஆகிய இவற்றின் ஒலியும் வல்வேட்டு
தனிமணி முழக்கு எழுதல் - விரைந்து மணந்து கொண்ட ஒப்பற்ற மங்கல
வாத்தியம் முழங்குதலும், இவையெலாம் ஊர்வழி தனக்கு ஏக நன்மை
என்பர் - இவை யாவும் ஊர்ச்செலவுக்கு நல்லது என்று அறிஞர் கூறுவர்.

              64. சகுனம் - 3

தலைவிரித் தெதிர்வருதல், ஒற்றைப் பிராமணன்,
     தவசி, சந்நாசி, தட்டான்,
  தனமிலா வெறுமார்பி, மூக்கறை, புல், விறுகுதலை,
     தட்டைமுடி, மொட்டைத் தலை,
கலன்கழி மடந்தையர், குசக்கலம், செக்கான்,
     கதித்ததில தைலம், இவைகள்
  காணவெதிர் வரவொணா; நீர்க்குடம், எருக்கூடை,
     கனி, புலால் உபய மறையோர்
நலம்மிகு சுமங்கலை, கிழங்கு, சூதகமங்கை
     நாளும்வண் ணான்அ ழுக்கு
  நசைபெருகு பாற்கலசம், மணி, வளையல் மலர்இவைகள்
     நாடியெதிர் வரநன் மையாம்;
அலைகொண்ட கங்கைபுனை வேணியாய்! பரசணியும்
     அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


     (இ-ள்.)
அலைகொண்ட கங்கைபுனை வேணியாய் - அலையையுடைய
கங்கையை அணிந்த சடையனே!, பரசு அணியும் அண்ணலே - மழு ஏந்திய
பெரியோனே!, அருமை ....... தேவனே!, தலைவிரித்து எதிர்வருதல் ஒற்றைப்
பிராமணன் தவசி சந்நாசி தட்டான் - தலைவிரி கோலமாக ஒருவர்
எதிர்வருதலும், ஒற்றைப் பார்ப்பானும், தவம்