புரிவோனும்,
துறவியும், தட்டானும், தனம்இலா வெறுமார்பி மூக்கறை புல்
விறகுதலை தட்டைமுடி மொட்டைத் தலை - தனம் இல்லாத மார்பினளும்,
மூக்கில்லாதவனும், புல்தலையனும், விறகுதலையனும், சப்பைத்தலையும்,
மொட்டைத்தலையும், கலன்கழி மடந்தையர் குசக்கலம் செக்கான் கதித்ததில
தைலம் - அணிகலம் இல்லாத பெண்களும், குசவன் பாண்டமும், வாணியன்
மிகுந்த எண்ணெயும், இவைகள் காணஎதிர் வரஒணா - இவை கண்காண
எதிர் வருதல் தகாதன; நீர்க்குடம், எருக்கூடை, கனி, புலால், உபயமறையோர்
- நீர்க்குடமும், எருக்கூடையும், பழமும் இறைச்சியும், இரட்டைப்
பார்ப்பனரும், நலம்மிகு சுமங்கலை, கிழங்கு, சூதகமங்கை, நாளும் வண்ணான்
அழுக்கு - நன்மைமிக்க மங்கல மடந்தையும், கிழங்கும், பூப்புப்பெண்ணும்,
நாளும் எடுக்கும் வண்ணான் அழுக்கும், நசை பெருகு பால்கலசம், மணி,
வளையல், மலர் - விருப்பம் ஊட்டும் பாற்குடமும், மணியும், வளையலும்,
மலரும். இவைகள்நாடி எதிர்வர நன்மைஆம் - இவை தேடி எதிரே வரின்
நலம் ஆகும்.
65.
உணவில் விலக்கு
கைவிலைக் குக்கொளும் பால் அசப் பால், வரும்
காராக் கறந்த வெண்பால்
காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழச்சோறு
காந்திக் கரிந்த சோறு,
செவ்வையில் சிறுக்கீரை, பீர்க்கத்தி, வெள்ளுப்பு,
தென்னை வெல்லம் லாவகம்,
சீரிலா வெள்ளுள்ளி, ஈருள்ளி, இங்குவொடு
சிறப்பில்வெண் கத்த ரிக்காய்,
எவ்வம்இல் சிவன்கோயில் நிர்மாலி யம் கிரணம்,
இலகுசுட ரில்லா தவூண்,
இவையெலாம் சீலமுடை யோர்களுக் காகா
எனப்பழைய நூலுரை செயும்
|
|