பக்கம் எண் :

104

செய்வது அவர்க்குக் குற்றம் எனப்படும், தாராளமா மிகத்தந்து உளோர்
தாராமைதான் இரப்போர் தோடம் ஆம் - அளவின்றி (முன்)
கொடுத்தவர்கள் (பின்) கொடாமை இரவலரின் (ஊழ்வினைக்) குற்றம்
எனப்படும், சாரம் உள நல் கருப்பஞ்சாறு கைப்பது அவர் தாலம்செய்
தோடம் ஆகும் - சிறப்புடைய நல்ல கருப்பஞ்சாறு கசப்பது
(பருகுவோருடைய) நாவின் குற்றம் எனப்படும்.

        67. மனை கோலுவதற்கு மாதம்

சித்திரைத் திங்கள்தனில் மனைகோல மனைபுகச்
     செல்வம்உண் டதினும் நலமே
  சேரும்வை காசிக்கு; மேனாள் அரன்புரம்
     தீயிட்ட தானி யாகா;
வெற்றிகொள் இராகவன் தேவிசிறை சேர்கடகம்
     வீறல்ல; ஆவ ணிசுகம்;
  மேவிடுங் கன்னியிர ணியன் மாண்ட தாகாது;
     மேன்மையுண் டைப்ப சிக்கே;
உத்தமம் கார்த்திகைக் காகாது மார்கழியில்
     ஓங்குபா ரதம்வந் தநாள்;
  உயர்வுண்டு மகரத்தில்; மாசிமா தத்தில்விடம்
     உம்பர்கோன் உண்ட தாகாது;
அத்தநீ! மாரனை எரித்தபங் குனிதானும்
     ஆகுமோ! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


     (இ-ள்.)
அத்த - தலைவனே!, அருமை ...... தேவனே!, சித்திரைத்
திங்கள்தனில் மனைகோல மனைபுகச் செல்வம் உண்டு - சித்திரைத்
திங்களில் வீடுகோலினாலும் வீடு குடி