பக்கம் எண் :

105

புகுந்தாலும் செல்வம் உண்டாகும், அதினும் வைகாசிக்கு நலமே சேரும் -
சித்திரையிலும் வைகாசித் திங்களில் நன்மையே உண்டாகும், மேனாள்
ஆனி அரன்புரம் தீ இட்டது; ஆகா - முற்காலத்தில் ஆனித்திங்களிலேதான்
சிவபெருமான் முப்புரத்திற்கு நெருப்பிட்டது ஆகையால் ஆனி ஆகாது,
வெற்றிகொள் இராகவன் தேவி சிறைசேர் கடகம் வீறு அல்ல -
வெற்றியைக்கொண்ட இராமன் மனைவி சிறைசென்ற ஆடித்திங்கள்
சிறப்புடையது அன்று, ஆவணி சுகம் மேவிடும் - ஆவணித்திங்கள் நலம்
பொருந்தும், கன்னி இரணியன் மாண்டது; ஆகாது - புரட்டாசித்திங்கள்
இரணியன் இறந்தது, ஆகையால், தகாதது, ஐப்பசிக்கு மேன்மை உண்டு -
ஐப்பசித் திங்களில் உயர்வு ஆண்டு, கார்த்திகைக்கு உத்தமம் -
கார்த்திகைத்திங்களில் நன்மை, ஓங்கு பாரதம் வந்தநாள் மார்கழியில்
ஆகாது - பெரிய பாரதச் சண்டை வந்த காலமான மார்கழித்திங்களில்
தகாது, மகரத்தில் உயர்வு உண்டு - தைத்திங்களில் மேன்மை உண்டாகும்,
உம்பர்கோன் விடம் உண்டது மாசி மாதத்தில் ஆகாது - வானவர்
தலைவனான சிவபிரான் நஞ்சுண்டதாகிய மாசித்திங்களில் தகாது, நீ மாரனை
எரித்த பங்குனிதானும் ஆகுமோ - நீ காமனை எரித்த பங்குனித்திங்களும்
தகுமோ? (தகாது)


     (வி-ரை.)
கதிரவன் ஆடித்திங்களிற் கடகராசியிற் செல்கிறேன்.
ஆகையாற் கடகம் ஆடியாயிற்று. இவ்வாறே கன்னி மகரம்
ஆகியவற்றிற்கும் கொள்க.

             68. விருந்து வாரம்

செங்கதிர்க் குறவுபோம், பகைவரும், விருந்தொருவர்
     செய்யொணா துண்ணொ ணாது;
  திங்களுக் குறவுண்டு; நன்மையாம்; பகைவரும்
     செவ்வாய் விருந்த ருந்தார்;
பொங்குபுதன் நன்மையுண் டுறவாம்; விருந்துணப்
     பொன்னவற் கதிக பகைஆம்;
  புகரவற் காகிலோ நெடுநாள் விரோதமாய்ப்
     போனவுற வுந்தி ரும்பும்;