|
கலைவலா
ருரைக்குநன் கவியொடம் பலவாண
கவிராயன் ஆகு மென்புன்
கவியையும் சூடியே மனமகிழ்ந் திடுவதுன்
கடன் ஆகும் அடல்நா கமும்
அலைபெருகு கங்கையும் செழுமதிய மும்புனையும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.)
அடல் நாகமும் அலைபெருகு கங்கையும் செழுமதியமும்
புனையும் அமலனே - கொல்லும் பாம்பும் அலைமிகுந்த கங்கையும் நல்ல
பிறையும் அணிந்த தூயவனே!, அருமை ........ தேவனே!, மலர் இதழி -
மலர்ந்த கொன்றை, பைங்குவளை - பசிய குவளை, மென்முல்லை -
மெல்லிய முல்லை, மல்லிகை - மருக்கொழுந்து, உயர் கூவிளம் - உயர்ந்த
வில்வம், மற்றும் உள வாச மலர் - வேறும் உள்ள மணமலர், பத்திரம் -
பச்சிலைகள் (ஆகியவற்றை) சிலர் சூட - சில (அடியார்கள்) அணிவிக்க,
மணி முடிதனில் பொறுத்து - நவமணிகள் இழைத்த முடியில் ஏற்று, சிலர்
எருக்கொடு வனத்துள் பூளை பச்சறுகு செம்முள்ளி மலர்சூட - சிலர்
எருக்கமலருடன் காட்டிற் கிடைக்கும், பூளைப்பூவும், பசுமையான
அறுகம்புல்லும் சிவந்த முள்ளி மலரும் அணிவிக்க, சித்தம்வைத்து அவையும்
அங்கீகரித்திடும் மகாதேவ தேவா - மனம் வைத்து அவற்றையும் ஏற்று
அருளும் பெருமைமிக்க தேவ தேவனே!, கலைவலார் தெரிந்து உரைக்கும்
நன்கவியொடு - கலையில் வல்லவர்கள் ஆராய்ந்து கூறும் நல்ல
பாக்களுடன், அம்பலவாண கவிராயன் ஆகும் என் புன்கவியையும் சூடிய -
அம்பலவாண கவிராயன் ஆகிய என் இழிந்த பாவையும் அணிந்தே, மனம்
மகிழ்ந்திடுவது உன் கடன் ஆகும் - திருவுள்ளம் களித்தருளுவது உன்
கடமை ஆகும்.
அறப்பளீசுர
சதகம் மூலமும் உரையும்
முற்றிற்று.
|