|
போன், காமதகனன்
- மாரனை எரித்தோன், மறலியை வென்ற பெம்மான் -
காலனை உதைத்த பெரியோன் புரம் தகித்தோன் - முப்புரத்தை எரித்தவன்,
மறம் மலி சலந்தரனை மாய்த்தவன் - வீரம் நிறைந்த சலந்தரனைக்
கொன்றவன், பிரமன் முடி வௌவினோன் - பிரமன் தலையைக்
கிள்ளினோன், வீரேசுரன் - (வீரபத்திரன்), மருவும் நரசிங்கத்தை மாய்த்த
அரன் (சரபேசுரன்), உமை பாகன் - உமை பங்கன் (அர்த்தநாரீசன்)
வனசரன் - வேடன், கங்காளன் - என்பு அணிந்தோன், விறல் மேவு
சண்டேச ரட்சகன் - வலிமை பொருந்திய சண்டேசருக்கு அருளியவன்,
கடுமாந்தி - நஞ்சுண்டவன், மிக்க சக்கரம் உதவினோன் - (திருமாலுக்கு)
உயர்ந்த சக்கரத்தைக் கொடுத்தவன், விநாயகற்கு அருள்செய்தோன்- மூத்த
பிள்ளையாருக்கு அருளியவன், குகன் உமையுடன் கூடி - முருகன் உமை
ஆகிய இருவருடன் கூடியவன் (சோமாஸ்கந்தமூர்த்தி) மிளிர் ஏக பாதன் -
விளங்கும் ஒற்றைத் திருவடியான், சுகன் - இன்ப வடிவமானவன், அறிவு
அரிய தட்சிணாமூர்த்தியொடு - அறிய இயலாத தக்கிணா மூர்த்தியுடன்,
இலிங்கம் ஆம் - இலிங்கம் ஆகிய ஐயனே - தலைவனே!, அருமை ........
தேவனே!,
(வி-ரை.) சிவபெருமான்
கொண்டருளிய மூர்த்தி (வடிவம்)
இருபத்தைந்தாமாறு எண்ணிக் காண்க.
|
100.
கவி வணக்கம்
மலரிதழி பைங்குவளை மென்முல்லை மல்லிகை
மருக்கொழுந் துயர்கூ விளம்
மற்றும்உள வாசமலர் பத்திரம் சிலர்சூட
மணிமுடி தனிற்பொ றுத்தே
சிலரெருக் கொடுவனத் துட்பூளை பச்சறுகு
செம்முள்ளி மலர்சூ டவே
சித்தம்வைத் தவையுமங் கீகரித் திடுமகா
தேவதே வா!தெ ரிந்தே
|
|