|
இனிய கற்கி
ஆகும், இவை பத்தும் அரிவடிவம் - இவை பத்தும் திருமாலின்
உருவங்கள்.
(வி-ரை.) பரசுராமன்
இராமனுக்கு முன்பே இருந்தவனாகையாலும், பலராமனும் கண்ணனுக்கு முன் பிறந்தவன் ஆகையாலும்
அம்முறைபற்றி
மாற்றிக் கூறப்பட்டன. வாமனன் - குள்ளன். வாமனனே திரிவிக்கிரமன்
எனும் உலகளந்த பேருருவம் எடுத்தோன் ஆகையால், புனித வாமன
மூர்த்தி உலகளந்து ஓங்கியது என்றார்.
|
99.
சிவமூர்த்தி
பிறைசூடி,
உமைநேசன், விடையூர்தி, நடமிடும்
பெரியன், உயர் வதுவை வடிவன்
பிச் சாடனன்,காம தகனன்,மற லியைவென்ற
பெம்மான், புரந் தகித்தோன்,
மறமலி சலந்தரனை மாய்த்தவன், பிரமன்முடி
வௌவினோன், வீரே சுரன்,
மருவுநர சிங்கத்தை வென்றஅரன், உமைபாகன்
வனசரன்,கங்கா ளனே,
விறல்மேவு சண்டேச ரட்சகன், கடுமாந்தி
மிக்கசக் கரம்உதவி னோன்,
விநாயகற் கருள்செய்தோன் குகன்உமை யுடன்கூடி
மிளிர்ஏக பாதன், சுகன்,
அறிவரிய தட்சிணா மூர்த்தியொ டிலிங்கம்ஆம்
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.)
பிறைசூடி
- பிறையணிந்தோன், உமைநேசன் - உமையின்
காதலன் (உமாமகேசன்), விடை ஊர்தி - சேக்கிழான் (இடபவூர்தி),
நடம்இடும் பெரியன் - நடனம் இடும் அண்ணல், உயர் வதுவை வடிவன் -
உயர்ந்த திருமணக் கோலத்தான், பிச்சாடனன் - பிச்சை யெடுப்
|