நற்பண்புடைய உறவினர்
நகைக்குமாறு இழிந்த நிந்தைக்குரிய
செயல்களைப் புரியம் பேதையரும் பற்று அற்ற பேர்க்கு முன்பிணை
நின்று பின்புபோய்ப் பரிதவித்திடும் மூடரும் - எந்த ஆதரவும்
இல்லாதவர்களுக்கு முதலில் (ஆராயாமல்) பிணையாகச் சென்று, பிறகு
வருந்துகின்ற பேதையரும், கண்கெட்ட மாடு என்ன ஓடி இரவலர்மீது
காய்ந்து வீழ்ந்திடும் மூடரும் - குருட்டு மாட்டைபோல ஓடி யாசகர்மேல்
சீறி விழுகின்ற பேதையரும், இவர் எலாம் - இவர்கள் யாவரும் கற்று
அறிவிலாத முழு மூடருக்குக் கால்மூடர் அரைமூடர் - (நூல்களை)
உணர்ந்தும் (அவற்றின்படி நடக்கும்) அறிவு இல்லாத பெரும்
பேதையர்களை நோக்கக் கால்பேதையரும் அரைப் பேதையரும் ஆவர்.
(வி-ரை.)
நாவலர்
: திருநாவலூரிற் பிறந்தவர் (சுந்தரர்). பிணை -
ஈடு. சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாருக்காகப் பரவையாரிடம் தூது
சென்று பரவையாரூடலைத் தவிர்த்தார். அதனால் அடியார்க்கு எளியர்
என்னும் தன்மை இங்குப் புலப்படுகிறது.
(க-து.)
கற்றறிமூடரே
யாவரினும் பெருமூடராவர்.
36.
இதற்கு
இது வேண்டும்
தனக்குவெகு
புத்தியுண் டாகினும் வேறொருவர்
தம்புத்தி கேட்க வேண்டும்;
தான்அதிக சூரனே ஆகினும் கூடவே
தளசேக ரங்கள் வேண்டும்;
கனக்கின்ற வித்துவான் ஆகினும் தன்னினும்
கற்றோரை நத்த வேண்டும்;
காசினியை ஒருகுடையில் ஆண்டாலும் வாசலிற்
கருத்துள்ள மந்த்ரி வேண்டும்;
தொனிக்கின்ற சங்கீத சாமர்த்தியன் ஆகினும்
சுதிகூட்ட ஒருவன் வேண்டும்;
சுடர்விளக்கு ஆயினும் நன்றாய் விளங்கிடத்
தூண்டுகோல் ஒன்று வேண்டும்;
|
|