உலகிலே வீரமும் அறிவும்
உடையவனெனினும் ஒரு பயனும் இல்லை.
பெற்ற தாயும் வாலாயமாய் சலித்திடுவாள் - ஈன்ற அன்னையும்
இயல்பாகவே வெறுப்பாள், வந்த சுற்றமும் இகழும் - வருகின்ற
உறவினரும் இகழ்வர், அனைவரும் மரியாதை இல்லாமல் பேசுவார் -
எல்லோரும் மதிப்பின்றி உரையாடுவர், மனைவியும் தூறுசொல்வாள் -
இல்லாளும் குறைகூறுவாள்.
(வி-ரை.)
பால்
இனிமையும் நலமும் உடையது. ஆகையாற் பாலான
மொழி என்பதும், அவ்வாறு உள்ள மொழியெனப் பொருள்படும்.
வாலாயம் - இயற்கை. தூறு - பழி. தூறுசொல்வாள் - பழிப்பாள்.
(க-து.)
பொருள்
இல்லாமல் உலகிற் சிறப்புப்பெற முடியாது.
38.
இழிவு
இரப்பவன்
புவிமீதில் ஈனன்;அவ னுக்கில்லை
என்னுமவன் அவனின் ஈனன்
ஈகின்ற பேர்தம்மை யீயாம லேகலைத்
திடும்மூடன் அவனில் ஈனன்!
உரைக்கின்ற பேச்சிலே பலன்உண் டெனக்காட்டி
உதவிடான் அவனில் ஈனன்!
உதவவே வாக்குரைத் தில்லையென் றேசொலும்
உலுத்தனோ அவனில் ஈனன்!
பரக்கின்ற யாசகர்க் காசைவார்த் தைகள்சொலிப்
பலகால் அலைந்து திரியப்
பண்ணியே இல்லையென் றிடுகொடிய பாவியே
பாரில்எல் லோர்க்கும் ஈனன்!
அரக்கிதழ்க் குமுதவாய் உமைநேச னே!எளியர்
அமுதனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
|