பொருள் கிடைத்தால்
‘தக்குழி நோக்கி அறஞ்செய்' தலே பயன் ஆகையால்
ஈகையினால் உண்டாகும் வறுமை அழகு தருவதாகும். பிறவும் இவ்வாறே
சீர்தூக்கிக்கொள்க. மங்கை : பன்னிரண்டு முதல் பதினாறு வயது வரை
உள்ள பெண்.
(க-து.)
பெரியோராற்
கிடைக்கும் இழிவும். பருவமங்கையால்
உண்டாகும் காமநோயும், அறஞ்செய்து பெற்ற தாழ்வும், போர்ப்புண்ணும்,
யானைமீது ஏறி வீழ்தலும் அழகையே தரும்.
46.
நல்வினை செய்தோர்
சாண்எனக்
காத்தவன், மெய்யினால் வென்றவன்,
தானம்இளை யாது தவினோன்,
தந்தைசொல்மறாதவன், முன்னவற் கானவன்
தாழ்பழி துடைத்த நெடியோன்,
வருபிதிர்க் குதவினோன், தெய்வமே துணையென்று
மைந்தன்மனை வியைவ தைத்தோர்,
மாறான தந்தையைத் தமையனைப் பிழைகண்டு
மாய்த்துலகில் மகிமை பெற்றோர்
கருதரிய சிபிஅரிச் சந்திரன், மாபலி,
கணிச்சியோன் சுமித்தி ரைசுதன்,
கருடன், பகீரத னுடன்சிறுத் தொண்டனொடு
கானவன், பிரக லாதன்,
அரியவல் விபீடணன் எனும்மகா புருடராம்
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.)
அத்தனே
- தலைவனே!, அருமை ......... தேவனே!,
சரண்எனக் காத்தவன்-அடைக்கலம் (என்ற புறாவைக்) காப்பாற்றியவன்,
மெய்யினால் வென்றவன் - உண்மையேபேசி வெற்றியுற்றவன், இளையாது
தானம் உதவினோன் - சோர்வின்றிக் கொடை கொடுத்தவன்! தந்தை
சொல் மறாதவன் - தந்தையின் மொழியைத் தட்டாதவன்,
|