நகம்மேவு
மதகரியில் ஏறினும் தவறினும்
நாளும்அது ஓர ழகதாம்!
நாய்மீதில் ஏறினும் வீழினும் கண்டபேர்
நகைசெய்தழ கன்றென் பர்காண்!
அகம்ஆயும் நற்றவர்க் கருள்புரியும் ஐயனே!
ஆதியே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே! |
(இ-ள்.)
அகம்ஆயும் நல்தவர்க்கு அருள்புரியும் ஐயனே -
உள்ளத்திலே ஆராயும் நல்ல தவத்தினர்க்கு அருள்செய்யும் தலைவனே!,
ஆதியே - முதல்வனே!, அருமை ........ தேவனே!, வெகுமானம் ஆகிலும்
அவமானம் ஆகிலும் மேன்மையோர் செய்யில் அழகுஆம் - பெருமதிப்புச்
செயலானாலும் இழிவுச் செயலானாலும் பெரியோர்கள் செய்தால்
அழகுதரும். விரகமே ஆகிலும் சரசமே அகிலும் விழைமங்கை செய்யில்
அழகுஆம் - காமநோயானாலும் காமக்கூட்டம் ஆனாலும் விரும்பத்தக்க
மங்கைப் பருவப் பெண் கொடுத்தால் அழகு ஆகும், வெகு தருமங்களைச்
செய்து தகுதாழ்வு வாழ்வு சாரில் பேரழகு ஆம் - மிக்க அறங்களைப்
புரிந்து தக்க தாழ்வாயினும் வாழ்வாயினும் பெற்றால் மிகுந்த அழகு ஆகும்,
சமர்செய்து சரீரத்தில் ஓர் ஊனம் மானம் எதுவாகிலும் வரில் அழகது
ஆம் - போர்புரிந்ததால் உடம்பில் ஏதாயினும் காயமாவது பெருமையாவது
உண்டானால் அழகு ஆகும். நகம்மேவு மதகரியில் ஏறினும் தவறினும்
அதுநாளும் ஓர் அழகது ஆம் - மலைபோன்ற மதயானையின்மேல்
ஏறினாலும் தவறி வீழ்ந்தாலும் அச்செய்கை எப்போதும் ஓரழகாக இருக்கும்,
நாய்மீதில் ஏறினும் வீழினும் கண்டபேர் நகைசெய்து அழகு அன்று என்பர்
- நாயின்மேல் ஏறினாலும் தவறி வீழ்ந்தாலும் பார்த்தபேர் நகைத்து
அழகாகாது என்று கூறுவர்.
(வி-ரை.)
நகம் - மலை. மலைபோன்ற யானை. ‘யானைபிழைத்த
வேல் ஏந்தல் இனிது' என்பதும் இக்கருத்தே.
|