பக்கம் எண் :

70

கப் பெண்டிருக்குக் கணவனைப் பார்த்தால் நஞ்சுபோல் இருக்கும்,
சுரரோகம் மிக்கபேர்க்கு மேன்மைதரு நல்சுவை பதார்த்தமும் அதிகவிடம்
ஆம் - வெப்புநோய் மிகுந்தவர்கட்கு உயர்ந்த இனிய சுவைமிக்க கறிகளும்
மிகுந்த நஞ்சாகும், அதிலோப வீணர்க்குஎலாம் வித்தியாதிபர் தமைக்
கண்டபோது விடமது ஆம் - மிகுந்த ஈகைப் பண்பிலாத வீணர்கள்
யாவருக்கும் கலைவல்லோரைக் கண்டபோது நஞ்சாகும், ஈனம்மிகு புன்கவி
வலோர்க்கு அதிக சபை காணில் ஏலாத கொடியவிடம் ஆம் - இழிவு
மிக்க புன்கவிவாணருக்குப் பேரவையைக் கண்டாற் பொறுக்கமுடியாத தீய
நஞ்சாகும், ஏற்றம் இல்லாத படுபாவிகட்கு அறம் என்னில் எந்நாளும்
அதிகவிடம் ஆம் - மேன்மையில்லாத பெரும் பாவிகளுக்கு அறம்
என்றால் எப்போதும் பெருநஞ்சு ஆகும்.

     (வி-ரை.) கள்ளருக்கு நிலவொளி தடையாகும். காமநோய்
காதலரைப் பிரிந்தோர்கட்கே. ஆகையாற், கூடியிருப்போர்க்கு இன்பம்
ஊட்டும் நிலவு அவர்களுக்குப் பெருவெறுப்புத்தரும். கலைவாணர்க்குக்
கொடுக்கவேண்டுமே என்னும் அச்சத்தால் ஈகையிலார்க்கு
வெறுப்புண்டாகும். ‘அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம்.'

     (க-து.) நன்னிலையில் இல்லாதார்க்கு நல்லவை தீயவையாகவே
காணப்பெறும்.

       45. தாழ்வும் உயர்வுபெறும்

வெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும்
     மேன்மையோர் செய்யில் அழகாம்!
  விரகமே ஆகிலும் சரசமே ஆகிலும்
     விழைமங்கை செய்யில் அழகாம்!
தகுதாழ்வு வாழ்வுவெகு தருமங்க ளைச்செய்து
     சாரிலோ பேர ழகதாம்!
  சரீரத்தில் ஓரூனம் மானம்எது வாகிலும்
     சமர்செய்து வரில்அ ழகதாம்?