னாகியவேள் என்க.
கச்சோதம் (வட) - மின்மினி. விதரணிகர் (வட)
- அறிஞர். விதரணை - அறிவு
(க-து.)
அரசர்க்கும்
வீரருக்கும் எட்டுத்திக்கினும் பரிகியென
ஒளி பரவும்.
44.
நன்று தீதாதல்
வான்மதியை
நோக்கிடின் சோரர்கா முகருக்கு
மாறாத வல்வி டமதாம்!
மகிழ்நன் றனைக்காணில் இதமிலா விபசரிய
மா தருக் கோவி டமதாம்!
மேன்மைதரு நற்சுவை பதார்த்தமும் சுரரோகம்
மிக்கபேர்க் கதிக விடமாம்!
வித்தியா திபர்தமைக் கண்டபோ ததிலோப
வீணர்க்கெ லாம்வி டமதாம்!
ஈனம்மிகு புன்கவி வலோர்க் கதிக சபைகாணில்
ஏலாத கொடிய விடமாம்!
ஏற்றமில் லாதபடு பாவிகட்க றமென்னில்
எந்நாளும் அதிக விடமாம்!
ஆனதவ யோகியர்கள் இதயதா மரையுறையும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.)
ஆன
தவயோகியர்கள் இதய தாமரை உறையும் அண்ணலே
- ஆக்கம்பெற்ற தவயோகியரின் உளத்தாமரைமலரில் வாழும் பெரியோனே!
அருமை ........ தேவனே!, சோரர் காமுகருக்கு வான்மதியை நோக்கிடின்
மாறாத வல்விடமது ஆம் - திருடருக்கும் காமநோயாளருக்கும் வானத்தில்
திங்களைப் பார்த்தால் நீங்காத கொடிய நஞ்சு ஆகும். இதம்இலா விபசரிய
மாதருக்கு மகிழ்நன்தனைக் காணில் விடமது ஆம் - நன்மையில்லாத
தீயொழுக்
|