பக்கம் எண் :

74

இவர்கள் நன்னெறியிலே சென்றதனால் தகாத செயல்களான இவற்றைச்
செய்தும் புகழ்பெற்றனர் என்று கூறுவர்.

     (க-து.) உலகியலுக்கு மாறாயினும் நன்னெறியிலே செல்வதே
நலந்தரும்.

         47. தீவினை செய்தோர்

வாயிகழ்வு பேசிமிகு வாழ்விழந் தோன், சிவனை
     வைதுதன் தலைபோ யினோன்,
  மற்றொருவர் தாரத்தில் இச்சைவைத்து உடலெலாம்
     மாறாத வடுவா யினோன்,
தாயத்தி னோர்க்குள்ள பங்கைக் கொடாமலே
     சம்பத் திகழ்ந்து மாய்ந்தோன்,
  தக்கபெரி யோர்தமை வணங்கா மதத்தினால்
     தந்திவடி வாய்அ லைந்தோன்,
மாயனைச் சபையதனில் நிந்தைசெய் தொளிகொள்நவ
     மணிமுடி துணிந்து மாய்ந்தோன்,
  வருநகுட னொடுதக்கன் குருடன்
     மகன், வழுதி, சிசுபா லனாம்!
ஆயும்அறி வாளரொடு தேவர்பணி தாளனே!
     அவனிபுகழ் அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆயும் அறிவாளரொடு தேவர்பணி தாளனே - ஆராய்கின்ற
அறிஞரும் அமரரும் பணியுந் திருவடியை உடையவனே!, அவனிபுகழ் -
உலகம் புகழும், அருமை ..... தேவனே!, வாய்இகழ்வு பேசிமிகு வாழ்வு
இழந்தோன் - வாயினாற் பிறரை இகழ்ந்துபேசித் தன் சிறந்த வாழ்வைப்
பறிகொடுத்தவன், சிவனை வைது தன் தலை போயினான் - சிவபிரானைப்
பழித்துத் தன் தலையை இழந்தவன், மற்றொருவர் தாரத்தில்
இச்சைவைத்துஉடல்