பக்கம் எண் :

75

எலாம் மாறாத வடு ஆயினோன் - பிறர் மனைவியிடம் ஆசை கொண்டு
தன் மெய்யெலாம் நீங்காத வடுவைக் கொண்டவன், தாயத்தினோர்க்கு
உள்ள பங்கைக் கொடாமலே சம்பத்து இழந்து மாய்ந்தோன் - பங்காளிக்கு
உரிய பங்கைக் கொடாததால் (தனக்குரிய) செல்வத்தையும் போக்கிவிட்டு
மடிந்தவன், தக்க பெரியோர் தமை வணங்கா மதத்தினால் தந்திவடியாய்
அலைந்தோன் - தகுதியான சான்றோரை வணங்காத செருக்கினால்
யானைவடிவாக அலைந்தவன், மாயனைச் சபையதனில் நிந்தனைசெய்து
ஒளிகொள் நவமணி முடிதுணிந்து மாய்ந்தோன் - கண்ணனை அவையிலே
பழித்துக் கூறியதனால் கதிர்விடும் நவமணி முடியை இழந்து இறந்தவன்
(முறையே,) வரு நகுடனோடு - (இந்திர பதவிக்கு) வந்த நகுடனும்,
தக்கன் - தக்கனும், அயிராவதன் - இந்திரனும்; குருடன் மகன் -
துரியோதனனும், வழுதி - பாண்டியனும், சிசுபாலன் ஆம் - சிசு பாலனும்
ஆவார்.

     (வி-ரை.) நகுடன
நூறு பரிவேள்வி செய்து இந்திரபதவி பெற்றான்.
ஏழுமுனிவர் சுமக்கும் சிவிகையிலே இந்திராணியை நாடிச் செல்கையில்
‘சர்ப்ப! சர்ப்ப' என விரைந்து செல்லும்படி பெரியோர்களை (மதியாமல்)
ஏவியதால் மலைப் பாம்பாக அகத்தியராற் சபிக்கப்பெற்றான்.
தக்கன்
சிவனை இகழ்ந்து பேசி, அவரை நீக்கி வேள்வி செய்ததனால் வீரபத்திரரால்
தலையை இழந்து ஆட்டுத்தலை பெற்றான்.
இந்திரன் கௌதமர்
மனைவியான அகலிகையை விரும்பியதால் உடலெங்கும் பெண்குறியைப்
பெற்றான்.
துரியோதனனதன் பங்காளிகளான பாண்டவரின் உரிமையைக்
கொடாததால் அவர்களாற் போரில் இறந்தான்.
சிசுபாலன் எப்போதும்
கண்ணனை யிகழ்ந்து கூறி வந்ததனால் அவராற் போர்க்களத்தில் இறந்தான்.
தாயம் - உரிமை. தந்தத்தையுடையது தந்தி : யானை.

     (க-து.)
தீயவழியிலே செல்வோர் தீமையடைவது உறுதி.