48. நன்னகர்
வாவிபல
கூபமுடன் ஆறருகு சேர்வதாய்,
மலைகாத வழியில் உளதாய்
வாழைகமு கொடுதெங்கு பயிராவ தாய்ச், செந்நெல்
வயல்கள் வாய்க் கால்க ளுளதாய்,
காவிகம லம்குவளை சேரேரி யுள்ள தாய்க்,
கனவர் த்த கர்கள்ம றைவலோர்
காணரிய பலகுடிகள் நிறைவுள்ள தாய், நல்ல
காவலன் இருக்கை யுளதாய்த்,
தேவரா லயம் ஆடல் பாடல் அணி மாளிகை
சிறக்கவுள தாய்ச்சற் சனர்
சேருமிடம் ஆகுமோர் ஊர்கிடைத் ததில் அதிக
சீவனமு மேகி டைத்தால்
ஆவலொ டிருந்திடுவ தேசொர்க்க வாசமென்
றறையலாம்! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) அருமை
..... தேவனே!, பல வாவி கூபமுடன் அருகுஆறு
சேர்வதாய் - பல பொய்கைகளும் கிணறுகளும் அருகில் ஆறும்
இருப்பதாய், காதவழியில் மலைஉளதாய் - காதவழித் தொலைவில் மலையை
உடையதாய், வாழை கமுகொடு தெங்கு பயிராவதாய் - வாழையும் கமுகும்
தென்னையும் பயிராகும் வளமுடையதாய், செந்நெல் வயல்கள்
வாய்க்கால்களும் உளதாய் - நல்ல நெல்விளையும் வயல்களும்
வாய்க்கால்களும் உடையதாய்; காவி கமலம் குவளைசேர் ஏரி உள்ளதாய் -
நீலமும் தாமரையும் குவளையும் மலர்ந்த ஏரியை உடையதாய்,
கனவர்த்தகர்கள் மறைவலோர் காண்அரிய பலகுடிகள் நிறைவு உள்ளதாய் -
பெரிய வணிகரும் மறையவரும் மற்றும் காண்பதற்கு இனிய பலவகைக்
குடிகளும் நிறைந்ததாய், நல்ல காவலன்
|
|
|
|