இருக்கை உளதாய்
- நல்ல அரசன் அரண்மனை உடையதாய்
(தலைநகரமாய்), தேவர் ஆலயம் ஆடல்பாடல் அணிமாளிகை சிறக்க
உளதாய் - வானவர் கோயிலும் ஆடலாலும் பாடலாலும் அழகுறும்
மாளிகைகள் சிறந்துள்ளதாய், சற்சனர் சேரும் இடம் ஆகும் ஓர் ஊர்
கிடைத்து - நல்லோர் உறையும் இடமுடைய ஒரு நகரம் வாய்த்து, அதில்
அதிக சீவனமும் கிடைத்தால் - அங்கு நன்றாக வாழ்க்கைக்கு வழியும்
பொருந்திவிட்டால் ஆவலோடு இருந்திடுவதே சொர்க்கவாசம் என்று
அறியலாம் - விருப்பத்துடன் இருப்பதே சுவர்க்க வாழ்வு என்று இயம்பலாம்.
(வி-ரை.) வேளாண்மையும் வணிகமும்
வளத்திற்கும், ஆடல் பாடலும்
ஆறும் கூபமும் வயல் வாய்க்கால்களும் ஏரியும், பொழிலும் பொய்கையும்
இன்பப் பொழுதுபோக்கிற்கும், நல்லோருறைவது நன்னெறிக்கும், வானவர்
கோயில் வழிபாட்டிற்கும், காவலன் உறைதல் சிறப்பிற்கும் ஆகும்.
காதவழியில் மலை, நோய் நொடியில்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காக
இருக்கலாம். இது அடுத்த செய்யுளால் தெரிகிறது.
(க-து.) ஐம்புலனுக்கும் விருந்தளிப்பதே
நகரமாக இருத்தல் வேண்டும்.
49.
தீநகர்
ஈனசா
திகள்குடி யிருப்பதாய், முள்வேலி
இல்லில் லினுக்கு முளதாய்,
இணைமுலை திறந்துதம் தலைவிரித் திடுமாதர்
எங்கும்நட மாட்டம் உளதாய்க்,
கானமொடு பக்கமாய் மலையோர மாய் முறைக்
காய்ச்சல்தப் பாத இடமாய்,
கள்ளர்பயமாய், நெடிய கயிறிட் டிறைக்கின்ற
கற்கேணி நீருண் பதாய்.
மானமில் லாக்கொடிய துர்ச்சனர் தமக்கேற்ற
மணியம்ஒன் றுண்டா னதாய்,
மாநிலத் தோர்தலம் இருந்ததனில் வெகுவாழ்வு
வாழ்வதிலும், அருக ரகிலே
|
|
|
|
|