பக்கம் எண் :

78

  ஆனநெடு நாள்கிடந்தமிழ்தலே சுகமாகும்
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


     (இ-ள்.)
அமலனே - குற்றம் அற்றவனே!, அருமை .......... தேவனே!,
ஈன சாதிகள் குடியிருப்பதாய் - இழிந்த சாதியினர் வாழ்வதாய்,
இல்இல்லினுக்கு முள்வேலி உள்ளதாய் - வீடுதோறும் முள்ளால் வேலி
யிருப்பதாய், இணைமுலை திறந்தும் தலைவிரித்திடும் மாதர் எங்கும்
நடமாட்டம் உளதாய் - மார்பிலே துணி விலகியவாறு தலைவிரித்துத்
திரியும் பெண்கள் எங்கும் உலாவும் நிலையினதாய், ஒருபக்கம் கானமாய் -
ஒருபக்கம் காடுடையதாய், மலைஓரமாய் - மலையோரமானதாய்,
முறைக்காய்ச்சல் தப்பாத இடமாய் - முறைக்காய்ச்சல் எப்போதும்
வருமிடமாய், கள்ளர் பயமாய் - திருடரால் அச்சமாய், நெடிய கயிறு இட்டு
இறைக்கின்ற கல்கேணி நீர் உண்பதாய் - நீண்ட கயிற்றைக் கட்டி
இறைக்கப்படும் கல்லால் அமைந்த கிணற்றுநீர் உண்ணு மிடமாய், மானம்
இலாக் கொடிய துர்ச்சனர் தமக்கு ஏற்றம் மணியம் ஒன்று உண்டானதாய் -
மானம் அற்ற மிகக் கொடியவருக்குத் தக்க தலைவனையுடையதாய், ஓர்
தலம் மாநிலத்து இருந்து அதனில் வெகுவாழ்வு வாழ்வதினும் - ஓர் ஊர்
இப் பெரிய உலகில் இருந்து, அவ்வூரிலே பெருக வாழ்வதினும்,
அருநரகிலே ஆன நெடுநாள் கிடந்து அமிழ்தலே சுகம் ஆகும் - கொடிய
நரகத்தில் உண்டான நீண்டகாலம் கிடந்து அதனில் முழுகிப்போதலே
இன்பம் ஆகும்.

     (வி-ரை.)
ஒருபக்கம் கானும் தீய விலங்குகளும் திருடர்களும்
வாழ்வதால் ஊரில் வாழ்வோர்க்குக் கலக்கமுண்டாகும். மலைஓரம்,
வெப்பமும் முறைக்காய்ச்சலும் தரும். ‘கொடுங்கோல்' மன்னர் வாழும்
நாட்டின் - கடும்புலி வாழும் காடு நன்றே' என்பதால், ‘துர்ச்சனர் தமக்கு
ஏற்ற மணியம்' உடைய நகர் நரகத்தினுங் கொடியது ஆயிற்று.
நெடிய........கற்கேணி - நீர்வளம் அற்றதைக் குறிக்கும். முள்வேலியும்
தலைவிரித்திடும் மாதர் நடமாட்டமும் நகரின் அழகைக் கெடுப்பன.


     (க-து.)
இத்தகைய நகரில் வாழ்வு கூடாது.