50.
முழுக்குநாள்
வரும்
ஆதி வாரம் தலைக் கெண்ணெய் ஆகாது
வடிவமிகும் அழகு போகும்;
வளர்திங் ளுக்கதிக பொருள்சேரும்; அங்கார
வாரம் தனக்கி டர்வரும்
திருமேவு புதனுக்கு மிகுபுத்தி வந்திடும்;
செம்பொனுக் குயர் அறிவுபோம்;
தேடிய பொருட்சேதம் ஆம்வெள்ளி; சனியெண்ணெய்
செல்வம்உண் டாயு ளுண்டாம்;
பரிகாரம் உளதாதி வாரம் தனக்கலரி;
பௌமனுக் கான செழுமண்
பச்சறுகு பொன்னவற் காம்; எருத் தூளொளிப்
பார்க்கவற் காகும் எனவே;
அரிதா அறிந்தபேர் எண்ணெய்சேர்த் தேமுழுக்
காடுவார்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) அருமை
...... தேவனே! வரும் ஆதிவாரம் தலைக்கு
எண்ணெய் ஆகாது - வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று தலைக்கு
எண்ணெய் கூடாது, (அவ்வாறு முழுகினால்) வடிவம் மிகும் அழகுபோகும் -
உருவத்தில் மிகுந்து அழகு நீங்கும், வளர் திங்களுக்கு அதிகபொருள்
சேரும் - வளர்ந்துவரும் திங்கட்கிழமைகளில் (முழுகினால்) மிகுந்த
பொருள் கிடைக்கும், அங்காரவாரம் தனக்கு இடர்வரும் -
செவ்வாய்க்கிழமைகளில் (முழுகினால்) துன்பம் உண்டாகும், திருமேவு
புதனுக்கு மிகுபுத்தி வந்திடும் - அழகு மிகுந்த புதன்கிழமைகளில்
(முழுகினால்) சிறந்த அறிவு வரும், செம்பொனுக்கு உயர் அறிவு போம் -
நல்ல வியாழக்கிழமைகளில் (முழுகினால்) சிறந்த அறிவு கெடும், வெள்ளி
தேடிய பொருள் சேதம்ஆம் - வெள்ளிக்கிழமைகளில் |
|
|
|