(முழுகினால்)
சேர்த்துவைத்த பொருள் அழியும், சனி எண்ணெய்
செல்வம் உண்டு ஆயுள் உண்டாம் - சனிக்கிழமைகளில் எண்ணெய்
(தேய்த்து முழுகினால்) செல்வமும் ஆயுள் வளர்ச்சியும் உண்டாகும்,
பரிகாரம் உளது - (தகாத கிழமைகளில் முழுக நேர்ந்தால்) மாற்று உண்டு,
(அந்த மாற்று,) ஆதிவாரம் தனக்கு அலரி - முதல் வாரமான
ஞாயிற்றுக்கிழமையில் அலரிமலராம், பௌமனுக்கு ஆன செழுமண் -
செவ்வாய்க்கு நல்ல மண் ஆகும், பொன்னவற்குப் பசு அறுகு ஆம் -
வியாழனுக்குப் பசிய அறுகம்புல் ஆகும், ஒளி பார்க்கவற்கு எருத்தூள்
ஆகும் - ஒளியுடைய வெள்ளிக்கு எருப்பொடி ஆகும். அரிது ஆஅறிந்த
பேர் எண்ணெய் சேர்த்து முழுக்கு ஆடுவார் - அருமையாக
உணர்ந்தவர்கள் எண்ணெயுடன் (இவற்றைச்) சேர்த்து முழுகுவர்.
(வி-ரை.) எள்
+ நெய் : எண்ணெய். நெய் என்பதே தைலத்தைக்
குறிக்கும் சொல்லாக முன்னாளில் வழங்கியது. பசுமை + அறுகு; பச்சறுகு.
பௌமன் (வட) - செவ்வாய்,
51. மருத்துவன்
தாதுப் பரீட்சைவரு காலதே சத்தோடு
சரீரலட் சணம்அ றிந்து,
தன்வந்த்ரி கும்பமுனி தேரர்கொங் கணர்சித்தர்
தமதுவா கடம்அ றிந்து
பேதப் பெருங்குளிகை சுத்திவகை மாத்திரைப்
பிரயோக மோடு பஸ்மம்
பிழையாது மண்டூர செந்தூர லட்சணம்
பேர்பெறுங் குணவா கடம்
சோதித்து, மூலிகா விதநிகண் டுங்கண்டு
தூயதை லம்லே கியம்
சொல்பக்கு வம்கண்டு வருரோக நிண்ணயம்
தோற்றியே அமிர்த கரனாய்,
|
|