பக்கம் எண் :

81

ஆதிப் பெருங்கேள்வி யுடையன் ஆ யுர்வேதன்
     ஆகும்; எம தருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.)
எமது - எம்முடைய, அருமை ....... தேவனே!, தாதுப்
பரீட்சை வரு கால தேசத்தோடு சரீர லட்சணம் அறிந்து - நாடித்
தேர்வையும் காலத்தையும் இடத்தையும் உடலின் இயல்பையும் உணர்ந்து,
தன்வந்திரி கும்பமுனி கொங்கணர் சித்தர் தமது வாகடம் அறிந்து -
தன்வந்திரியும் அகத்தியரும் கொங்கணரும் சித்தர்களும் எழுதிய மருத்துவ
நூலைக் கற்றுணர்ந்து, பேதம்பெருங் குளிகை சுத்திவகை மாத்திரை பஸ்மம்
பிரயோகமோடு பிழையாது - பலவகைப்பட்ட பெருமைமிக்க
குளிகைகளையும் (மருந்துச் சரக்குகளைத்) தூய்மை செய்யும் முறைகளையும்
மாத்திரைகளையும் பஸ்மத்தையும் கொடுக்கும் தன்மையையும் தவறாது கற்று,
மண்டூர செந்தூர லட்சணம் பேர் பெறும் குணவாகடம் சோதித்து -
மண்டூரம் செந்தூரம் இவற்றின் இயல்புகளைப் புகழ்பெற்ற பண்புடைய
மருத்துவ நூலின் வாயிலாகத் தேர்ந்து, மூலிகாவித நிகண்டும் கண்டு - பல
வேர்வகைகளின் நிகண்டையும் அறிந்து, தூய தைலம் லேகியம்
சொல்பக்குவம் கண்டு - தூய எண்ணெயும் இலேகியமும் செய்யும்
முறையைச் சொல்லியவாறு அறிந்து, வருரோக நிண்ணயம் தோற்றி - வரும்
நோய்களின் முடிவை வெளிப்பட உணர்ந்து, அமிர்தகரனாய் - கைநலம்
உடையவனாய், ஆதிப் பெருங்கேள்வி உடையன் - முற்காலத்திலிருந்து
வழிவழியாக வரும் கேள்வியறிவையும் உடையவனே, ஆயுர்வேதன் ஆகும்
- மருத்துவன் ஆவான்.

     (வி-ரை.)
இங்குக் கூறப்படும் மருத்துவன் இயல்பு பொதுவானது,
நம்நாட்டு மருத்துவங்கள் ஆயுர்வேதம், சித்தம்என இருவகைப்படும். ‘தேரர்
கொங்கணச் சித்தர் தமது வாகடம்அறிந்து, என்பதனாற் பொதுவென
உணரலாம். வாகடம், மருத்துவநூல் - வளி பித்தம் ஐ (வாத பித்த
சிலேத்துமம்) என்னும் மூன்றுநரம்பு