|
(இ-ள்.)
அண்ணலே
- தலைவனே!, அருமை ....... தேவனே!, கடல்
அளவு உரைத்திடுவர் - கடலின் பரப்பைக் கணக்கிட்டுக் கூறுவர்,
அரிபிரமர் உருவமும் காணும் படிக்கு உரைசெய்வார் - திருமால்
நான்முகன் ஆகியவரின் வடிவத்தையும் காணுமாறு விளக்கிக் கூறுவர்,
காசினியின் அளவு பிரமாணமும் சொல்லுவார் - உலகின் எவ்வகை
அளவையும் விளக்குவர். காயத்தின் நிலைமை அறிவார் -
உடற்கூறுபாட்டை உணர்வர், விடல் அரிய சீவநிலை காட்டுவார் -
விடுதற்கரிய உயிரின் நிலையையும் காண்பிப்பர், மூச்சையும் விடாமல்
தடுத்து அடக்கி மேன்மேலும் யோகசாதனை விளைப்பார் - மூச்சை
விடாமல் தடை செய்து அடக்கி மேலும் மேலும் யோகசித்தியைச் செய்வர்,
விண்மீதினும் எட்டித் தாவுவார் - வானத்திலும் எழும்பித் தாவுவர், தொடல்
அரிய பிரமநிலை காட்டுவார் - அடைய இயலாத பிரமத்தின் நிலையையும்
காண்பிப்பர், எண்வகைத் தொகையான சித்திஅறிவார் - எட்டு வகையான
எண்ணிக்கையுடைய சித்தியையும் தெரிவர் (எனினும்), சூழ்வினை
வரும்போது சிக்கி உழல்வார் - சூழும் பழைய வினைப்பயன் வரும்போது
அதனில் அகப்பட்டுத் தவிப்பர், ஒரு நான்முகற்கும் அது துடைக்க அடைவு
அல - ஒப்பற்ற பிரமனுக்கும் அதனை அழிக்கும் வழி இல்லை, என
அளவுஇல் பலநூல் தெரிந்து சொலும் - என்று கணக்கற்ற பலநூல்கள்
அறிந்து கூறும்.
(வி-ரை.)
எண்வகைச்
சித்திகள் : அணுவைப் போலாதல்,
மலைபோல் பேருருவெடுத்தல், எவ்வுயிரினுங்கலத்தல், நொய்மையாதல்,
நினைத்தவற்றை யடைதல், நிறையுளனாதல் ஆட்சியுளன் ஆதல், பிறவற்றை
வசப்படுத்துதல் ‘ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று - சூழினும் தான்முந்
துறும்' என்றார் வள்ளுவர்.
(க-து.) ஊழ்வினைப்
பயன் மாற்ற முடியாதது.
|