சனன வாசனையினால்
ஆகிவரும் அன்றி - பிறப்பின் தொடர்பினால்
இயற்கையிலே உண்டாகி வருமே அல்லாமல், நிலம்மேல் நலம்சேரும்
ஒருவரைப் பார்த்து - உலகில் நலம் பெற்று இருக்கும் ஒருவரைக்கண்டு,
அது பெறக் கருதின் நண்ணுமோ - அந்த இயல்பை அடைய நினைத்தால்
ஆகுமோ? இரஸ்தாளிதன் நற்சுவை தனக்குவர வேம்பு நெடிதுநாள்
தவம்செயினும் வாராது - இரஸ்தாளி வாழையின் நல்ல சுவை தனக்குக்
கிடைக்கவேண்டி வேம்பு நீண்ட நாள் தவம் புரிந்தாலும் கிடைக்காது.
(வி-ரை.) தவமே
: ஏ : அசை. காண் : முன்னிலையசை.
சனனவாசனை - பழம்பிறப்புத் தொடர்பு. மங்கை, இங்குமனைவியைக்
குறிக்கிறது.
(க-து.)
நல்வினையால் இயல்பாகவே அமையவேண்டிய இவை
செயற்கையால் அமையா.
54.
ஊழ்வலி
கடலள
வுரைத்திடுவர், அரிபிரமர் உருவமும்
காணும் படிக்கு ரைசெய்வர்,
காசினியின் அளவுபிர மாணமது சொல்லுவார்
காயத்தின் நிலைமை அறிவார்,
விடலரிய சீவநிலை காட்டுவார் மூச்சையும்
விடாமல் தடுத்த டக்கி
மேன்மேலும் யோகசா தனைவிளைப் பார், எட்டி
விண்மீதி னும்தா வுவார்,
தொடலரிய பிரமநிலை காட்டுவார், எண்வகைத்
தொகையான சித்தி யறிவார்,
சூழ்வினை வரும்பொழுது சிக்கியுழல் வார்! அது
துடைக்கவொரு நான்மு கற்கும்
அடைவல எனத்தெரிந் தளவில்பல நூல்சொல்லும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
|