பக்கம் எண் :

84

        53. பிறவிக்குணம் மாறாது

கலங்காத, சித்தமும், செல்வமும், ஞாலமும்,
     கல்வியும், கருணை விளைவும்,
  கருதரிய வடிவமும் போகமும், தியாகமும்,
     கனரூபம் உளமங் கையும்,
அலங்காத வீரமும், பொறுமையும், தந்திரமும்,
     ஆண்மையும், அமுத மொழியும்,
  ஆனஇச் செயலெலாம் சனனவா சனையினால்
     ஆகிவரும் அன்றி, நிலமேல்
நலம்சேரும் ஒருவரைப் பார்த்தது பெறக்கருதின்
     நண்ணுமோ? ரஸ்தா ளிதன்
  நற்சுவை தனக்குவர வேம்புதவ மேநெடிது
     நாள்செயினும் வாரா துகாண்!
அலங்காரம் ஆகமலர் கொன்றைமா லிகைசூடும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே.


     (இ-ள்.)
அலங்காரம்ஆக மலர்கொன்றை மாலிகை சூடும்
அண்ணலே - அழகாக மலர்ந்த கொன்றை மாலையை மிலைந்த
பெரியோனே!, அருமை ........ தேவனே!, கலங்காத சித்தமும் - குழம்பாத
மனமும், செல்வமும் - நல்ல பேறும், ஞானமும் - அறிவும், கல்வியும் -
கலையும், கருணை விளையும் - அருட்பெருக்கும், கருது அரிய வடிவமும் -
நினைவுக்கரிய உருவ அழகும் போகமும் - நுகர்ச்சியும் (அனுபவமும்),
தியாகமும் - கொடையும், கனரூபம் உள மங்கையும் - பேரழகுடைய
மனைவியும்,அலங்காத வீரமும் - அசைவில்லாத துணிவும், பொறுமையும் -
(பிறர் குற்றம்) பொறுத்தலும், தந்திரமும் - சூழ்ச்சியும், ஆண்மையும் -
ஆளுந்திறனும், அமுதமொழியும் - இனிய சொல்லும், ஆன இச்செயல்
எலாம் - ஆகிய இவை யாவும்