பக்கம் எண் :

83

     (இ-ள்.) அரி அயன் நாளும் அர்ச்சனைசெய் சரணத்து ஆதிநாயக -
திருமாலும் பிரமனும் எப்போதும் மலரிட்டு வழிபடும் திருவடிகளையுடைய
முதன்மையான தலைவனே!, மிக்கவேத நாயகன் ஆன அண்ணலே -
சிறந்த மறைமுதல்வனான பெரியோனே!, அருமை ........ தேவனே!, சோதிடம்
பொய்யாது மெய்என்பது அறிவு அரிய சூழ்கிரகணம் சாட்சி ஆம் - கணித
நூல் பொய்படாது. உண்மையே என்பதற்கு அறிஞரேயல்லாமல்
பொதுமக்களால் அறியமுடியாத சூழும் கிரகணமே சான்று ஆகும், சொல்
பெரிய வாகடம் நிசம் என்கை பேதிதரு தூயமாத்திரை சாட்சிஆம் -
புகழ்பெற்ற பெருமைமிக்க மருத்துவநூல் உண்மையென்பதற்குப் பேதிக்குத்
தரும் நல்ல மாத்திரைகளே சான்று தரும், ஆதியில் செய்ததவம் உண்டு
இல்லை என்பதற்கு ஆள் அடிமையே சாட்சி ஆம் - முன்னே செய்த
நல்வினை உண்டா இல்லையா என்பதற்கு ஆளும் அடிமையுமே சான்று
ஆகும். அரி தேவதேவன் என்பதை அறிய முதல் நூல் அரிச்சுவடியே
சாட்சிஆம் - திருமால் வானவர் தலைவன் என அறிவதற்குச் சிறுவர்கள்
கற்கும் முதல் நூல் அரிச்சுவடியாக இருப்பதே சான்று ஆகும், மா தேவனே
நாதன் என்பதற்கோ ருத்ர நமகசமகம் சாட்சி ஆம் - சிவபெருமானே
தலைவன் என்பதை அறிவதற்கோ என்னில் உருத்திர நமகசமகம் என்னும்
மறைப்பனுவலே சான்று ஆகும், நாயேனை ரட்சிப்பது உன்பாரம் - நாய்
போன்று இழிவுற்ற என்னைக் காப்பது உன் பொறுப்பு.

     (வி-ரை.)
‘நாதனே ‘மாதேவன்' என்பதை, மாதேவனே நாதன்'
எனப் பிரித்துக் கூட்டுக. உருத்ர நமகசமகம் : ஒரு மந்திரம்.

     (க-து.)
எதனையும் ஆராயாது ஒரு முடிவுக்கு வருதல் ஒவ்வாது