பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்145

நேரிசை வெண்பா
 
152.
தேத்தந்த கொன்றையான் றெய்வத் தமிழ்க்கூடல்
மாத்தந்த வேழ மதமடங்க - மீத்தந்த
மாகவி மானம் வணங்கினமாற் கூற்றெமைவிட்
டேகவி மானமுக் கேன்.    
(49)

கட்டளைக் கலித்துறை
 
153.
 ஏனின் றிரங்குதி யேழைநெஞ் சேவண் டிமிர்கடப்பங்      
 கானின் றதுவுமொர் கற்பக மேய்ந்தக் கற்பகத்தின்      
 பானின்ற பச்சைப் பசுங்கொடி யேமுற்றும் பாலிக்குமால்
 தேனின்ற வைந்தருச் சிந்தா மணியொடத் தேனுவுமே.     
(50)

    *பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
 
154.
தேன றாதசி லைக்க ரும்பகொ
    லைக்க ரும்பொரு வேம்பெனும்
தேம்பு யத்தணி வேம்பி னைக்கனி
    தீங்க ரும்பெனுமிவ்வணம்

    152. தேத் தந்த - தேனைத் தந்த. மாத் தந்ததம் - பெரிய கொன்றையிடைய. மதமடங்கும்படி அமிழ்த்தும் கனமுடைய தென்றபடி; “போரானை முதுகுறைப்பப் பொறையாற்றுஞ் சினகரத்து” (121) என்றார் முன்னும். மாக விமானம் - இந்திர விமானம். கூற்று: விளி. எமை விட்டு ஏகு; அவிமானம் உனக்கு ஏன்; அவிமானம் - உயிரைப் பிரித்துக்கொண்டேகும் தொழிலில் உள்ள பற்று. ஏகு அவி மானம் உனக்கு ஏன் எனப்பிரித்தலும் ஆம்; அவி - அழிக; மானம் - பெருமை.

    153. ஏன் நின்று. கடப்பங்கானில். (பி-ம்.) ‘கானின் றது மற்றொர் கற்பகமே.’ கற்பகமென்றது சோமசுந்தரக் கடவுளை. பச்சைப் பசுங்கொடி - மரகதவல்லியாகிய அங்கயற்கணம்மை. ஐந்தரு - ஐந்து கற்பக தருக்கள். அ: உலகறி சுட்டு. தேனு - காமதேனு. சிந்தாமணி ஆகியவற்றை முற்றும் அக்கொடியே பாலிக்கும் என்க.

    154. செவிலி கூற்று.

    (பி-ம்.) *தாழிசை. கொலைக்கு அரும்பு - கொலைத்தொழில் செய்தற்குத் தோன்றிய. வேம்பெனுமென்றது வெறுப்பாளென்னும் பொருளது; “விறகரும்பன் கைக்கரும்போ வேம்பென்னும்” (134.) தேம்புயத்தணி வேம்பு - சிவபெருமான சுந்தர பாண்டியாரகிய காலத்தில் திருப்புயங்களில் அணிந்த வேப்பமாலை. கரும்பெனுமின்றது விரும்புவாளென்றபடி. மான்றாத கண். மழைக்கண் என்க; மான் - மான் கண்ணன் தன்மை. மாறியாட இயல்புக்கு மாறாகிப் பேச; என்றது கரும்பை