பக்கம் எண் :

144குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

தூணறா முழவுத் தோண்மடித் தும்பர்
   சுவல்பிடித் தணந்துபார்த் துணங்கும்
தோரண மாடக் கூடலிற் சோம
   சுந்தரா சந்த்ரசே கரனே.    
(47)

நேரிசை யாசிரியப்பா
151.
கரும்பொறிச் சுரும்பர் செவ்வழி பாடச்
சேயிதழ் விரிக்கும் பொற்பொகுட் டம்புயம்
மாண்மகற் கலர்பொற் பலகை நீட்டும்
கடவுள்செங் கைக்குப் படியெடுப் பேய்க்கும்
5
தடமலர்ப் பொய்கைத் தண்டமிழ்க் கூடல்
ஒண்ணுத றழீஇய கண்ணுதற் கடவுள்
எண்மர் புறந்தரூஉ மொண்பெருந் திகைக்குத்
தூய்மைசெய் தாங்குப் பானிலா விரிந்த
இரசதங் குயின்ற திருமா மன்றகம்
10
பொன்மலை கிடப்ப வெள்ளிவெற் புகந்தாய்க்குச்
செம்பொன் மன்றினுஞ் சிறந்தன் றாயினும்
கருந்தாது குயின்றவென் கன்னெஞ் சகத்தும்
வருந்தியும் வழங்கல் வேண்டும்
இருவே றமைந்தநின் னொருபெருங் கூத்தே.     
(48)

    (4) மகளிர் உள்ள மாடம் தம் உலகத்திற்கும் மேலே சென்றிருத்தலின் தேவர் தலைநிமிர்த்துப் பார்த்தனர், (581: 7-10) உம்பர் - தேவர். சுவல் - பின்கழுத்து.

    151. (அடி, 1-4) தாமரை மலருக்குச் சிவபெருமான் திருக்கரம் உவமை. செவ்வழி - ஒரு பண். பாண்மகற்கு - பாண பத்திரனுக்கு. படியெடுப்பு - ஒப்பாகியதொரு பொருளை எடுத்தல்.

    (6) கடவுள்: விளி.

    (7) எண்மர் புறந்தரூஉம் - திக்குப்பாலகர் எண்மர் பாதுகாக்கும். திகை - திசை. (பி-ம்.) ‘புறந்தரூஉ மொருபேருடுக்கைக்குத்’.

    (9-11) இரசதம் - வெள்ளி. வெள்ளியம்பலம் நினக்குப் பொன்னம் பலத்தினும் சிறந்தது. சிறந்தன்று - சிறந்தது.

    (10-12) கருந்தாது - இருமறபு. வழங்கல் - செய்தருளல். இருவேறமைத கூத்து - இயல்பாக ஆடிய கூத்தும் மாறி யாடிய கூத்தும். (பி-ம்.) ‘இருபே றமைந்த’.