பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்143

கட்டளைக் கலித்துறை
149.
கண்முத் தரும்பின கொங்கைபொன் பூத்த கனிபவளத்
தொண்முத் தரும்புமென் பெண்முத்துக் கேமுத்த முண்டமயத்
தண்முத் தமைந்த தமனிய மேதலைச் சங்கம்பொங்கும்
பண்முத் தமிழ்க்கொர் பயனே சவுந்தர பாண்டியனே.    
(46)

            பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிராய விருத்தம்
150.
பாணறா மழலைச் சீறியாழ் மதுரப்
   பாடற்குத் தோடுவார் காதும
பனிமதிக் கொழுந்துக் கவிர்சடைப் பொதும்பும்
   பாலித்தாய் பாட்டளி குழைக்கும்
கோணறா வுளைப்பூங் கொத்தலர் குடுமிக்
   குறுங்கணெட் டிலைச்சிலை குனித்த
கூற்றுயிர் குடித்தாய்க் காற்றலா மலதென்
   கொடியிடைக் காற்றுமா றுளதோ
சேணறாப் பசும்பொற் றசும்பகசும் பிருக்கும்
   சிகரியிற் றகரநா றைம்பாற
சேயரிக் கருங்கட் பசுங்கொடி நுடங்கும
   செவ்வியிற் சிறைமயி லகவத்

    149. செவிலித்தாய் கூற்று. கண்முத்து - கண்ணீர்த்துளி. பொன் - பசலை. கனி பவளத்து ஒண்முத்து - பல்; பவளமென்றது வாயை. முத்தம் உண்டு - இத்துயரிலிருந்து விடுதலை உண்டோ; உண்டென்பது காகுஸவர மென்னும் ஓசை வேறுபாடு உடையது; இமயத்தண் முத்து - உமாதேவியார். (பி-ம்.) ‘தபனியமே’. தலைச்சங்கத்திற் பொங்கிய.

    150. செவிலி கூற்று. (அடி, 1) பாண் - பாட்டு. சிவபெருமான் தம்முடைய இரண்டு திருச்செவிகளிலும் இசைபாடும் இரண்டு கந்தர்வர்களை அணிந்துள்ளாரென்பது புராண வரலாறு; “தோடுவார் காதன்றே தோன்றாத் துணையையர், பாடுவா ரோரிருவர்க்கிட்ட படைவீடே”(திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்.) சடையாகிய காடு. அளி - வண்டு.

    (2) கோண் - வளைவு. உளைப்பூ - உளையைப் போன்ற பூ; “தீங் கரும்பீன்ற திரள்பா லுளையலரி” (நாலடி. 199); உளை - தலையாட்டம். குறுங்கண் - குறுகிய கணுக்கள். நெட்டிலைச் சிலை - கரும்புவில். கூற்றென்றது இங்கே காமனை. காமனது உயிரைப் போக்கன நினக்குப் பிரிவுத் துன்பத்தை ஆற்றதல் எளிதாகும். கொடியிடை - தலைவி.

    (3) சிகரி - கோபுரம். தகரம் - மயிர்ச் சாந்து. பசுங்கொடி - மகளிர். செவ்வியின் - அழகைப்போல. (பி-ம்.) ‘களி மயில்’. அகவ - ஆட.