| தடந்தோள் குறித்திங் கணைந்தே மெனிற்பின் | | தரும்பே றுன்மத்தின் பெருவாழ்வோ | | தொடர்ந்தே யுடற்றிந் திரன்சா பமுற்றும் | | துரந்தா லுமிப்பெண் பழிபோமோ | | அடைந்தே மிடைக்கொன் றையந்தா ரெவர்க்கென் | | றமைந்தே கிடக்கின் றதுதானே. |
அறுசீர்ச்சந்த விருத்தம் 147. | தான வெங்களி றோடு மிந்திரன் சாப முந்தொலையா | | மேனி தந்தகல் யாண சுந்தரர் மேவு வண்பதியாம் | | வானி மிர்ந்திட வாடு மொண்கொடி வால சந்திரனும் | | கூனி மிர்ந்திட வேநி மிர்ந்திடு கூட லம்பதியே. |
மருட்பா 148. | அஞ்சேன் மடநெஞ் சபிடேகச் சொக்கரருட் | | செஞ்சே வடிக்கடிமை செய்யார்போற் - றுஞ்சா | | தெறிதிரைக் கருங்கட லேய்க்கும் | | அறலியற் கூந்தற் காடமர்க் கண்ணே. |
மயக்கமுறுதலாகிய பெரிய வாழ்க்கை; ஊமத்தமலரைப்போல் ஒன்றுக்கும் பயன்படாத வாழ்வென்பது வேறுபொருள்; யாம் விரும்புவது உயர்ந்த கொன்றை மலராயிருப்பவும் நீர் அளிப்பது இழிந்த ஊமத்தமலரோவென்பதும் வேறொரு குறிப்புப் பொருள். இந்திரன் பழியையே சாபமென்றார் (147.) அடைந்தேமிடை - அடைந்தேமாகிய எங்களுக்குள். (பி-ம்.) ‘அடைந்தேம்விடக்’. இப்பாடத்திற்கு, அடைந்த எம்மைவிட என்று பொருள் கொள்க.
147. (சந்தக் குழிப்பு.) தான தந்தன தான தந்தன தான தந்தனனா.
தானம் - மதம். வெங்களிற்றின் சாபத்தோடு இந்திரன் சாபத்தையும். மேனி - முன்னைமேனி. (பி-ம்.) ‘மேன்மைதந்த’. வாலசந்திரன் - பிறை.
148. தலைவன் கூற்று. நெஞ்சு: அண்மை விளி. அபிடேகச் சொக்கர் - திருமுடியை யணித சொக்கநாதக் கடவுள்; 157. செஞ்சேவடி - மிகச் செம்மை அடி. ஆடு அமர்க்கண் - வெற்றியையும் அமர்த்தலையும் உடைய கண். கண் கடலை யொக்குமென்றது கடலில் அமுதமும் நஞ்சும் தோன்றியது போலக் கண்களிலும் அருட்பார்வையும் மருட்பார்வையும் தோற்றினவென்னும் கருத்தை உட்கொண்டது (562, 668.) அமுதங் கடைந்தது கருங்கடலென்பது ஒரு சாராசிரியர் கொள்கை. (தக்க.284, உரை, விசேடக் குறிப்பு.)
|