அவள் பரிகசியாமல். இனிப்போடு - இனிமையோடு. நகையாட - தேவரீர் நகைத்தலைச் செய்க; ஆட: வியங்கோள்; “நிவந்தோங்கு வெண்குடை மண்ணக நிழற்செய” (மணி. 22 : 14) (பி-ம்.) ‘நகையாடலே. முன்பு நகைத்ததனால் இன்னாமை விளைந்தது; இப்போது இனிமை விளையும்படி நகைக்க வேண்டுமென்றவாறு.
144. (பி-ம்.) *இன்னிசை. இது தலைவியை முன்னிலைப் படுத்தி அவள் தன்னை வித்திய வண்ணத்தைத் தலைவன் உரைத்தல்.
அமையும் - என்னை வருத்துவதற்குப் போதுமானது. நாகரிகம் - கண்ணோட்டம். அனங்கன் வினைகொளல் - மலரெய்தல் முதலிய செய்கைகளைக் காமன் மேற்கொள்ளுதல். அவன் முயலாமலே நீர் அம் முயற்சியின் பயனை உண்டாக்கினீரென்றபடி. தகை - அழகு. (பி-ம்.) ‘தகைசேர’். பகை ஏது; இல்லையென்றபடி. பகையில்லாதிருப்பவும் இங்ஙனம் நகையாலும் பார்வையாலும் வருத்துதல் முறையன்றென்பது தலைவன் கருத்து.
145. தோழிகூற்று; தலைவி கூற்றுமாம். தனபாரத்தில் கணை உண்டாக்கிய. மதியின் நிலாவாகிய காரம். வைத்து என் - வைத்ததனாற் பயன் யாது? புண்ணுக்குக் காரம் வைத்தால் ஆறிவிடும்; நீர் காரம் வைத்தும் பசும்புண் பசும் புண்ணாகவே இருக்கின்ற தென்றபடி. (பி-ம்.) ‘காரம் வைத்த’.
146. (சந்தக் குழிப்பு.) தனந்தா தனத்தந் தனந்தா தனத்தந் தனந்தா தனத்தந் தனதானா. (பி-ம்.) +எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
இது சோமசுந்தரக் கடவுள்பால் காமற்ற மகளிர் கூற்று. கடங்கால் பொருப்பு - யானை. (பி-ம்.) ‘போர்வைகட்டும்’. உன்மத்தின் பெருவாழ்வு