| விள்ளுங் கமலத்தும் வேத சிரத்தும்விண் மீனைமுகந் | | தள்ளுங் கொடிமதிற் பொற்கூடல் வெள்ளி யரங்கத்துமே |
*கட்டளைக் கலிப்பா 142. | அரங்க மையற்கு வெள்ளிய ரங்கமே | | ஆல யம்பிற வெள்ளிய ரங்கமே | | உரங்கொள் பல்கல னென்பர வாமையே | | உணர்வு றாமையு மென்பர வாமையே | | விரும்பு பாடலு மாகவி மானமே | | மேவு மானமு மாகவி மானமே | | திருந்து தானந் தடமதிற் கூடலே | | செயற்கை வெள்ளித் தடமதிற் கூடலே. |
*விருத்தக் கலித்துறை 143. | கூடார் புரந்தீ மடுக்கின்ற துஞ்சென்று கும்பிட்டவோர் | | ஏடார் குழற்கோதை யுயிமுண்ப தும்மைய ரிளமூரலே |
யான் றொண்ட ரெண்வகைப் பத்தி மாதோ” (திருக்குற்றாலப். நூற்பயனுரைத்த. 27.) (பி-ம்.) ‘கொத்தரும்பு’. விள்ளும கமலம் - அடியார் இதயகமலம். வேதசிரம் - உபநிடதம்.
142. (பி-ம்.) *தாழிசை. அரங்கம் - நடனசாலை. (பி-ம்.) ‘அரங்கும்’. ஐயற்கு - சோமசுந்தரக்கடவுளுக்கு. வெள்ளியரங்கம் - வெள்ளியம்பலம். பிற எள்ளியர் அங்கம் - சிவபெருமானையன்றிப் பிற பொருள்களை வெறுத்தவர்களுடைய மனம்; அங்கம் - மனம்; அம் கம் - அழகிய சிரமென்று கொண்டு பிரமரந்திரஸ்தானமென்று கொள்ளுதலும் ஒன்று; “நண்ணு மாலய மாதவரங்கமே” (628.) உரம் - வன்மை; மார்பெனினும் ஆம். கலன் என்பு அரவு ஆமை; கலன் - ஆபரணம். உணர்விறாமையும் என்பரவாமை - அவர் அறியாதிருப்பதும் என்னுடைய துதியாதிருக்கும் தன்மையே. அறிந்தால் அருள்செய்திராரென்றபடி. மானமுடைய மாகவி; மானம் - பெருமை. இங்கே கவியென்றது திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் முதலியோருடைய திருப்பாசுரங்களை. மேவும் மானம் - விரும்பி வீற்றிருந்தருளும் விமானம். மாக விமானம் - இந்திர விமானம். தானம் - இருப்பிடம். தட மதில் கூடல் - வளைந்த மதில்களையுடைய மதுரை. வெள்ளித் தடமதிற் கூடல் செயற்கை; வெள்ளித் தடம் - வெள்ளி மலை; கைலாயம். அதில் இருத்தல் செய்கை; மதுரையிலிருத்தலே அவருடைய இயற்கை யென்றவாறு.
143. (பி-ம்.) *நெடிலடி விருத்தம், நெட்டிலை விருத்தம். இது தோழி கூற்று. கூடார் - பகைவருடைய. இளமூரல் - புன்னகை. கன்னி வளநாடு - பாண்டிநாடு. வைத்தாள் - தடாதகைப்பிராட்டியார். நகையாது-
|