| பெருநாமங் கொடுத்தவர்தங் கருநாமந் துடைக்கும் | | பெற்றியார் தமிழ்மதுரைக் கொற்றியார் கேளீர் | | ஒருநாமம் பயந்தவர்முன் றருநாமம் விந்திங் | | குலகரிடு நாம்மதொன் றுள்ளநீர் வெள்ளைத் | | திருநாம மிட்டவன்றே கெட்டவன்றோ விளையோர் | | தெரித்திடுநா மமுமுனிவோர் தரித்திடுநா மமுமே. |
நேரிசை வெண்பா 140. | மும்மைத் தமிழ்க்கூடன் மூலலிங்கத் தங்கயற்கண் | | அம்மைக் கமுதா மருமருந்தை - வெம்மைவினைக் | | கள்ளத் திருக்கோயிற் காணலாங் கண்டீர்நம் | | |
கட்டளைக் கலித்துறை 141. | உள்ளும் புறம்புங் கசிந்தூற் றெழநெக் குடைந்துகுதி | | கொள்ளுஞ்செந் தேறல் குனிக்கின்ற வாபத்திக் கொத்தரும்ப |
விளி. பயந்தவர் - வெற்றோர். அவர் முன் தருநாமமாகிய ஒரு நாமம் - இயற்பெயர். உலகரிடு நாமமென்றது கொற்றியாரென்பதனை இயல்பாக உள்ள பெயரொன்றையும் தொழிலால் வந்த பெயரொன்றையும் உடையீரென்றபடி. (பி-ம்.) ‘உலகரிடு நாமமெமொன்று’. வெள்ளைத் திருநாம மென்றது திருமண்ணை. இட்ட அன்றே - நெற்றிநிலணிந்த அன்றே, இளையோர் தெரிந்திடு நாமம் - இளைஞர்களது ஆராய்ச்சிக்குரிய புகழ். (பி-ம்.) ‘இளையோர்’, ‘இமையோர்’. இளைஞரும் முனிவரும் நும்மைக் கண்டால் மயலுற்றுத் தம் நிலையழிவரென்பது கருத்து.
140. மூலலிங்கத்து - எத்தலத்திற்கும் முன்பு தோன்றிய இலிங்கத்தில் எழுந்தருளியுள்ள (206); “முளைத்தானை யெல்லார்க்கு முன்னே தோன்றி” (தே. திருநா.) கள்ளத் திருக்கு ஒயில்; திருக்கு - மாறுபாடு. உள்ளமாகிய திருக்கோயிலுள் காணலாம்; “கண்ணி னிற்பர் மனத்திருக்கோயிலே காசியேயவர்க கோர்திருக் கோயிலே” (628); “திருவரங்கந் திருக்கோயில் சேர்ந்துமது திருக்கோயில்”(திருவரங்கக். 41.)
141. தேறல் - தேன்; இங்கே சிவபிரான்; “மாற்றே னென வந்த காலனை யோல மிடவடர்த்த, கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன்” (திருச்சிற். 150): “கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றம்” (விக்கிரம. உலா.) குனிக்கின்றவா - ஆடுகின்றது என்ன ஆச்சரியம்; குனிக்கின்றி வாறென்பதன் ஈறு தொக்கது. பத்திக் கொத்து - பத்தியின் தொகுதி; எண்வகைப்பத்தி; “விம்மிதம் புளகம் போர்த்தல் விழிப்புன்ன் மொழிதள்ளாடல், செம்மை சேர் சரியை யாதி திருத்தொண்டு துதி தியானம், அம்மவோ திருப்ப ணிக்கென் றீட்டுவ தழித்துண்ணாமை, எம்மையா ளுடை
|