பக்கம் எண் :

138குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

 தடங்கொண்ட கூடற் சவுந்தர
     மாறர்பொற் றாள்பெயர்த்து
 நடங்கொண்ட தோர்வெள்ளி மன்றே
     றுதுமின்று நாளையிலே.    
(34)

 சந்த விருத்தம்
138.
இருநில னகழ்ந்ததொரு களிறுவெ ளிறும்படியொர்
    இருளியி னணைந்த ணையுமாக்
குருளையை மணந்தருளி னிளமுலை சுரந்துதவு
    குழகரி துணர்ந்தி லர்கொலாம்
கருகியது கங்குலற வெளிறியது கொங்கை சில
    கணைமதன் வழங்க வவைபோய்
உருவிய பசும்புணில்வெ ணிலவனல் கொளுந்தியதெம்
    உயிர்சிறி திருந்த தரிதே.    
(35)


    எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
139.
அருநாம மரசிவசங் கரநாம மெனக்கொண்
    டவற்றொருநா மம்பகர்ந்தோர்க கரியயனிந் திரனாம்

முழந்து மடலேறாப், பெண்ணிற் பெருந்தக்க தில்” (குறள்.); ஆயினும் மடலேறுவேமென்று அவர்கள் கூறுவதாக அமைத்தல் புலவர்க்கு இயல்பு; திவ்யப்பிரபந்தத்திலுள்ள சிறிய திருமடலிலும், பெரிய திருமடலிலும் இச்செய்தி விளங்கக் காணப்படும். (பி-ம்.) ‘வந்தனையோ நெஞ்சமே’. மடலேறுவார் மன்றிற் செல்லுதல் வழக்கம். இன்று நாளையிலே - இன்றேனும் நாளையேனும்.

    138. (சந்தக் குழிப்பு) தனதன தனந்ததன தனதன தனந்ததன தனதன தனந்த தனனா.

    தலைவி கூற்று.

    களிறு - ஆண்பன்றியாகிய திருமால். வெளிறும்படி - நாணமடையும்படி; இயல்பாகவே வெண்ணிறமுள்ளதாக இருத்தற்கு வேறுகாரணம் கற்பித்தார். இருளி - பன்றி. அணையும் மாக்குருளையை - தாயென நினைந்து பொருந்திய கரிய கன்றிக் குட்டிகளை. (பி-ம்.) ‘அணையுமக்’. மணந்து - பொருந்தி. பன்றிக்குட்டிகளுக்கு முலையருத்திய திருவிளையாடற்செய்தி இது. அற - முற்றும். வெளிறியது - விளர்த்தது. நிலவாகிய அனல்.

    139. கொற்றியார் - பிச்சைக்கு வரும் வைணவப் பெண்.

    அர சிவ சங்கர நாமங்களை அரிய நாமம் எனக்கொண்டு. கருநாமம் - பிறவி யச்சம். பெற்றியாரது மதுரையிலுள்ள கொற்றியார்: அண்மை