பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்137

    கொச்சகக் கலிப்பா
135.
   ஈரித்த தென்ற லிளவாடை திங்களென்றோர்
   பேரிட்ட மும்மைப் பிணியோ தணியாவாற்
   பாருக்கு ணீரே பழியஞ்சி யாரெனின்மற்
   றாருக் குரைக்கே மடிகே ளடிகேளோ.         
(32)


    கட்டளைக் கலிப்பா
136.
   அடுத்த தோர்தவ வேடமும் புண்டரம்
   அணிந்த முண்டமு மாய்வெள்ளி யம்பலத்
   தெடுத்த தாள்பதித் தாடிக் கடைப்பிச்சைக்
   கிச்சை பேசுமப் பிச்சனெ னச்செல்வீர்
   கடைக்க ணோக்கம்ம் புன்மூர லும்முயிர்
   கவர்ந்து கொள்ள விடுத்த கபாலிபோற்
   பிடித்த சூலமுங் கைவிட்டி லீரென்றோ
   பிச்சி யாரெனும் பேருமக் கிட்டதே.        
(33)


    கட்டளைக் கலித்துறை
137.
   இடங்கொண்ட மானும் வலங்கொண்ட
   வெண்மழு வும்மெழுதும்
   படங்கொண்டு வந்தனை யானெஞ்ச
   மேயினிப் பங்கயப்பூந்

    135. செவிலி கூற்று; தலைவி கூற்றுமாம்.

    வாத பித்த சிலேட்டுமமென்னும் மூன்றால் வரும் பிணியை நினைந்து மும்மைப் பிணியென்றார்.

    136. பிச்சியார் - பிச்சை வாங்கச் செல்லும் சிவவேடங் கொண்ட பெண். பிச்சியாருக்கும் சிவபெருமானுக்கும் ஒப்புமை கூறப்படும்.

    முண்டம் - நெற்றி. கடை - வீட்டு வாயில்கள். நோக்கம் மன்மதனை எரித்தது; மூரல் புரத்தை எரித்தது. பிச்சியார் இயல்பு: 614.

    137. இது தலைவி மடலேறக் கருதி கூறியது, காமமிக்கவர் தன் அன்புக்கு உரியாரைப் பெராவிடத்துத் தம் இருவர் படத்தையும் எழுதிக் கைக்கொண்டு பனைமடலாற் செய்த குதிரையில் ஏறிப் பொதுவிடத்தே வருவதாகச் செய்யுள் செய்தல் மரபு. ஆண்மக்களே மடலேறுவர்; மகளிர் மடலேறுதல் மரபன்று; (தொல். அகத். 35): “கடலன்ன காம