பக்கம் எண் :

136குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

    *கொச்சகக் கலிப்பா
133.
    ஆவமே நாணே யடுகணையே யம்மதவேள்
    சாவமே தூக்கிற் சமனுஞ் சமனன்றே
    ஓவமே யன்னா ளுயிர்விற்றுப் பெண்பழிகொள்
    பாவமே பாவம் பழியஞ்சுஞ் சொக்கருக்கே.        
(30)


    சந்த விருத்தம்
134.
    கரைபொரு திரங்கு கழிதொறு மிருந்து 
        கயல்வர வுறங்கு புள்ளீரே 
    பருவமு மிழந்தென் மகடுய ருழந்து 
        படுவிர கமொன்று முள்ளீரே 
    அருமையொ டுமெங்கள் பெருமையை யறிந்து 
        வருள்புரி யவிங்கு வல்லீரே 
    மருவிய கடம்ப வனமது புகுந்தெ 
        மதுரைய ரன்முன்பு சொல்லீரே.     
(31)

தழுவினமையால் தோளும் மார்பும் முறையே வளைத்தழும்பும் நகிற்றழும்பும் பெற்றன; இது காஞ்சித்தலத்து நிகழ்ந்த செய்தி. காமநோயால் வரும் துன்பத்தைத் தாம் அறிந்திருந்தும் அவளுக்கு அத்துன்பத்தை மிகுவிக்கன்றாரென்றாள். கண்டுமென்னும் உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. அம்பாவை செய்வார் - அழகிய பாவையைப் போலச் செயலற்றிருப்பவளாகச் செய்வார். நலிகிற்பின் - நலிந்தால். (பி-ம்.) ‘நலியிற்பின்’. ஏது ஆம் - என்ன பயன் உண்டாகும்.

    133. (பி-ம்.) *இன்னிசை. இது தோழி கூற்று. ஆவம் - அம்பறாத்தூணி. மதவேளுடைய ஆவம் முதலியவற்றை ஆராய்ந்தால்; ஏகாரங்கள் எண்ணுப் பொருளன. சமனுஞ் சமன் அன்று - யமனும் ஒப்பு அல்லன். இவை உயிரை உடலினின்றும் பிரிக்குந் திறத்தில் அவனினும் ஆற்றலுடையன வென்றவாறு. ஓவம் - சித்திரம். முன் ஒரு பெண் கொலையால் வரும்பழியை அஞ்சும் சொக்கருக்கு இப்போது பெண்பழி பாவமாகுமென்றாள்; இச் செய்தி பழியஞ்சிய படலத்தால் அறியப்படும். (பி-ம்.) ‘பழியஞ்சிச்’.

    134. (சந்தக் குழிப்பு.) தனதன தனந்த தனதன தனந்த தனதன தனந்த தய்யானா. இது செவிலி கூற்று. இரங்குதல் - ஒலித்தல். புள்ளீரே - பறவைகளே; கயல்வர உறங்கு புள்ளீரென்றமையின் நாரை முதலியவற்றைக் கொள்க. பருவம் - மங்கைப்பருவம். விரகம் - பிரிவாலுண்டாகும் துன்பம்.