பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்135

நேரிசை வெண்பா
131.
கடங்கரைக்கும் வெற்பிற் கரைகரைக்கும் வைகைத்   
தடங்கரைக்க ணின்றவர்நீர் தாமோ - நெடுந்தகைநும்   
கூட்டம் புயமே கொடாவிடில்வேள் கூன்சிலையில்   
நாட்டம் புயமே நமன்.    
(28)

        எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
   132.
    நம்பா நினக்கோல முறையோ வெனக்கால
        நஞ்சுண்டு பித்துண்டு நாந்தேவ ரென்பார்
    தம்பாவை யர்க்கன்று காதோலை பாலித்த
        தயவாளர் கூடற் றடங்காவில் வண்டீர்
    செம்பாதி மெய்யுங் கரும்பாதி யாகத்
        திருத்தோளு மார்பும் வடுப்பட்ட துங்கண்
    டெம்பாவை யைப்பின்னு மம்பாவை செய்வார்
        எளியாரை நலிகிற்பி னேதா மிவர்க்கே.        
(29)

ஐயர்கள்தம் பவனத்தை - அடியார்களுக்குக் கொடுப்பது தேவர்களுடைய உலகத்தை. ஐயர் கொள்வது கடம்பவனத்தை - ஐயராகியதாம் இருப்பிடமாகக் கொள்வது மதுரையை.

    131. கடம் - மதம். கடம் கரைக்கும் வெற்பின் - யானையின் மீது; யானையைப் போலவென்பதும் பொருந்தும். “மணியார் வைகைத் திருக்கோட்டி னின்றதோர் திறமுந் தோன்றும்” (தே. திருநா. திருப்பூவணம்.) இது பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலை நினைந்து கூறியது. நும் கூட்டத்தை நும்புயம் கொடாவிடில். வேள் - காமன். சிலை - வில். நாட்டு அம்புயம்; அம்புயம் - தாமரைமலராகிய அம்பு.

    பிட்டுத் திருவிழாக் காலத்துச் சோமசுந்தரக் கடவுள் யானை மேல் எழுந்தருளுதல் வழக்க மென்பர்.

    132. இது செவிலி் கூற்று.

    ஓலம், முறையோ வென்பன முறையீட்டுக்குரிய சொற்கள். என - என்று தேவர்கள் முறையிட. காலநஞ்சு - முடிவைச் செய்யும் ஆலகால விஷம்; காலம் - முடிவு. பித்துண்டு - மயக்க முற்று. பாவையர் - தெய்வ மங்கையர். காதோல் மாங்கலியம் போன்ற சிறப்புடையது; அதனைப் பாலித்தலாவது அவர்களுடைய மலங்கலம் கெடாமல் நிலவும்படி நிறுத்துதல் தயவு: தயாவென்னும் வடசொல்லின் இறுதி குறுகி உகரம் பெற்றது. செம்பாதி மெய் கரும்பாதியாகவென்றது காமத்தால் அம்பிகையை ஒரு பாதிஇல் வைத்ததைக் குறிப்பித்தபடி. அம்பிகை