பக்கம் எண் :

134குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கலி விருத்தம்
129.
    உண்பது நஞ்சமா லுறக்க மில்லையால் 
    வண்பதி கூடலே வாய்த்த தென்னுமாற் 
    பெண்பத நின்னதே பெரும வேள்கணை 
    எண்பது கோடிமே லெவன்றொ டுப்பதே.         
(26)


கட்டளைக் கலிப்பா
130.
    தொடுத்த ணிந்தது மம்புத ரங்கமே
       சுமந்தி ருந்தது மம்புத ரங்கமே
    எடுத்து நின்றது மாயவ ராகமே
       எயிறி றுத்தது மாயவ ராகமே
    அடுப்ப தந்தணர் பன்னக ராசியே
       அணிவ துஞ்சில பன்னக ராசியே
    கொடுப்ப தையர் கடம்பவ னத்தையே.
       கொள்வ தையர் கடம்பவ னத்தையே        
(27)

சான்றாண்மை பயிலுதல், பலமளிதல், கலை எழுதிய ஏடுகளைத் தாங்கல், வீடளித்தல், மந்திரம் ஆகிய இவைகள் ஆசிரியனிடத்தும் உள்ளனவாதலால் பனையைக் குருமூர்த்திக்கு ஒப்பாகச் சாற்றதகும் என்றான்.

    129. தலைவியின் வருத்தத்தைத் தோழி தலைவனிடம் கூறல். முதலிரண்டடிகளில் தலைவிக்கும் சொக்கநாதருக்கும் உள்ள ஒப்புமை கூறப்படும்.

    இவள் உண்பது நஞ்சமாக உள்ளது. பெண்ணின் பதம் உம்முடைய நிலையாப் போன்றது; பதம் - நிலைமை; இவள் உம்மைப் போன்றவளாயிருப்ப உம்மால் வெல்லப்பட்ட மன்மதன் இவளைத் துன்புறுத்தல் பொருந்ததென்றபடி. தலைவனும் தலைவியும் ஒத்த நிலையினராதல் வேண்டுமென்னும் தமிழ்மரபுபற்றி இது கூறினாள் (தொல். களவு 2.) எண்பது கோடி: பலவென்னும் பொருளது.

    130. தொடுத்து அணியப்பட்டது அழகிய தேவர்களுடைய என்பு; புதர் - தேவர்; அங்கம் என்பு. சுமந்திருந்தது தரங்கத்தையுடைய அம்பை; தரங்கம் - அலை; அம்பு - நீர்; கங்கை தம்மேலே எடுத்து நின்றது மாயவரது ஆகத்தை, மாயவர் - திருமால். இது காயாரோகண மூர்த்தியைக் குறித்தது. இவ்வரலாறு காஞ்சிப்புராணத்தால் உணரலாகும். மாயும்படி வராகத்தின் எயிறு இறுக்கப்பட்டது. அந்தணர் பல் நகர் ஆசி அடுப்பது - அந்தணர்களுடைய பல வீடுகளிலே செய்யப்படும் ஆசியே அடுக்கப்படுவது; நகர் - வீடு பன்னக ராசி - பாம்பின் கூட்டம். கொடுப்பது