கலித்தாழிசை 127. | கொம்மைக் குவடசையக் கூர்விழிவேல் போராடக் | | கம்மக் கலனுஞ் சிலம்புங் கலந்தார்ப்ப | | மும்மைத் தமிழ்மதுரை முக்கணப்பன் சீர்பாடி | | அம்மென் மருங்கொசிய வாடுகபொன் னூசல் | | அழகெறிக்கும் பூண்முலையீ ராடுகபொன் னூசல். |
*எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் 128. | அழகுற்றதொர் மதுரேசனை யமரேச னெனக்கொண் | | டாடுங்களி யானின்றிசை பாடுங்களி யேம்யாம் | | பொழுதைக்கிரு கலமூறுபைந் தேறற்பனை யினைநாம் | | போற்றிக்கரு மூர்த்திக்கிணை சாற்றத்தகு மப்பா | | பழுதற்றதொர் சான்றாண்மை பயின்றார்தின முயன்றாற் | | பலமுண்டத னலமுண்டவ ரறிவார்பல கலைநூல் | | எழுதப்படு மேடுண்டது வீடுந்தர வற்றால் | | எழுதாத்தொர் திருமந்திர மிளம்பாளையு ளுண்டே. |
127. கொம்மைக் குவடு - தனமாகிய மலைகள்; கொம்மை - நகில். கம்மக்கலன் - கம்மியரது தொழிற்சிறப்பைப் பெற்ற ஆபரணங்கள்; ‘கம்ம்பபல்கலம்’ (சீவக. 991.) அம் மென்மருங்கு - அழகிய மெல்லிய இடை.
128. கட்குடியர் கள்ளையும் அஃது உண்டாகும் பனைமுதலியவற்றையும் சிறப்பித்துக் கூறுவது இது. (பி-ம்.) *தாழிசை.
மதுரேசன் - மதுரையென்னும் நகர்க்கத் தலைவம்; மதுரை - கள்ளென்பது வேறு பொருள். மதுரேசனானமையால்தான் அமரேசனானா னென்பது களியின் கருத்து; அமரேசன் - மரணமில்லாத தேவர்களுக்குத் தலைவன். களியால் - களிப்பினால். இருகலம் - அறுத்த பாளையிற் செருகி வைத்திருக்கும் இரண்டு மண் கலயங்கள்; இரண்டுகலமென்னும் அளவை யென்பது வேறு பொருள். தேறல் - கள். சாற்றத்தகும் - சாற்றவேண்டும். சான்றாண்மை: சிலேடை. (பி-ம்.) ‘பயின்றாரிதின் முயன்றால்’. பலம் - பிரயோசனம், பழம். நலத்தை உண்டவர் அறிவார். கலைநூல் - கலைகள். ஏடு - பனையேடு. வீடு - முத்தி, குடியிருக்கும் வீடு. வற்று - வன்மையுடையது. பனையோலையால் வீட்டை வேய்தல் பற்றி, ‘வீடும் பறவற்றுய என்றான். எழுதாத்தோர் திருமந்திரம். - கள், உபதேசித்தற்கு உரிய வேதமந்திரம்.
|