பக்கம் எண் :

132குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

வல்லானைக் கேயிடவாய்த்தது போலுமென்வாட்கணன்னாய்
வில்லார்ர புயத்தண்ண றணளி யாற்றந்தமென்றழையே.
(21)

வஞ்சித்துறை
125.
            தழைத்திடுங் கூடலார் 
            குழைத்துடன் கூடலார் 
            பிழைத்திடுங் கூடலே 
            இழைத்திடுங் கூடலே.    
(22)

வஞ்சி விருத்தம்
126.
        கூட லம்பதி கோயில்கொண்
        டாடல் கொண்டவ ராடலே
        ஊட லூம்முடம் பொன்றிலே
        கூட லும்மொரு கொம்பரோ.    
(23)

அன்னாயென்றது தலைவியை (தொல். பொருளியல், 52, ந.) (பி-ம்) ‘வாட்கணினாய்’. வில் ஆர் - வில் பொருந்திய; வில் - விற்றழும்பெனினும் ஆம் (சீவக. 21, ந.) அண்ணல் - தலைவன். தழை - மலர்களையும் இலைகளையும் சேர்த்துக் கட்டிச் செய்யப்பட்ட உடை: முருகு. 201-ஆம் அடி முதலியவற்றைப் பார்க்க. தண்ணளியாற் றந்த என்றதனால், அக்கரும்பினும் இத்தழை சிறந்ததென்பதைப் புலப்படுத்தினாள்.

    125. தலைவி கூற்று. கூடலிழைத்தலென்னும் துறை.

    கூடலார் - கூடற்பதியையுடையவர்; கூடல் - மதுரை. குழைத்து உடன் கூடலார் - மனத்தை உருக்கி என்னோடு சேரார். இழைத்திடும் கூடல் - மணலில் இழைத்திடும் கூடற்சுழி; எழுவாய். கூடற்பிழைத்திடும் - கூடுதல் பிழைத்திடும்; கூடல் - ஒரு தலைப்பு மற்றொரு தலைப்புடன் கூடுதல்.

    தலைவரைப் பிரிந்த மகளிர் அவர் வரவை எதிர்நோக்கிப் பார்க்கும் நிமித்தங்களுள்கூடற்சுழி ஒன்று. மணலிற்சுழியைச் சுழித்துப் பார்க்கையில் அது முதலும் கடையும் கூடுமாயின் வருவரென்றும் கூடாதாயின் வாராரென்றும் கொள்ளுதல் மரபு; நீடு நெஞ்சு ணினைந்துக ணீர்மல்கும், ஒடு மாலினொடு டொண்டொடி மாதராள், மாட நீண்மரு கற்பெருமன் வரிற், கூடு நீயென்றுத கூட லிழைக்குமே” (தே. திருநா.)

    126. பதி - ஊரை. ஆடல் கொண்டவர் - ஆளுதல் கொண்டவர். ஆடலே - அவர் திருவிளையாட்டு என்ன வியப்பைத் தருகின்றது! ஒரு கொம்பு ஊடலும் கூடலும் ஒன்றிலேதான்; கொம்பு - உமாதேவியார். வேறு வேறான உடம்புகளாற் செய்யப்படும் ஊடலும் கூடலும் ஓருடம்பிலே நிகழ்கின்றன; இஃது என்ன வியப்பென்பது கருத்து.